பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 சத்திய வெள்ளம்

அவர்கள் முயற்சி பலனளித்தது. மேரி தங்கத்தின் பெற்றோர் வேலை பார்த்த அதே பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளியில் டிரில் மாஸ்டராக வேலை பார்க்கும் பிச்சை முத்து என்பவர் வாசக சாலைக்குப் பிடிக்க வந்தார். தற்செயலாகக் கதிரேசனும் மற்ற மாணவர்களும் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவராகவே அவர்களிடம் வந்து பேச்சுக் கொடுத்தார். எடுத்த எடுப்பிலேயே அவர்மேல் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுவிட்ட காரணத்தால் மாணவர்கள் தாங்கள் வந்த காரியத்தை அவரிடம் சொன்னார்கள். அதற்கு அவர் உதவியையும் நாடினார்கள். “யாரு மிஸ்டர் சற்குணத்தையும் அவருடைய மனைவியையுமா பார்க்க வந்தீர்கள்?. அவர்களிடமிருந்து நீங்கள் பெரிதாக எதைத் தெரிந்து கொண்டுவிடப் போகிறீர்கள்? எனக்குத் தெரிந்தவரை அவரும் அவர் மனைவியும் ரொம்பவும் பயந்த சுபாவம் உள்ளவர்கள். இல்லாவிட்டால் வீட்டைப் பூட்டிப் போட்டுவிட்டுப் போலீசார் சொன்னார்கள் என்று வாழைத் தோட்டத்தில் போய் உட்காருவார்களா?”

“என்னது? வாழைத் தோட்டத்திலா?” “ஆமாம்! பஞ்சாயத்து யூனியன் தலைவரின் வாழைத் தோட்டத்தில் கிணற்றிலிருந்து பம்ப் செட் மூலம் நீர் இறைப்பதற்காக மோட்டார் ரூம் என்று கிணற்றை ஒட்டி ஒரு சிறிய அறை இருக்கிறது. இரண்டு மூன்று நாட்களாகச் சற்குணமும் அவர் மனைவியும் அங்கேதான் ஏறக்குறைய சிறையிடப்பட்டதுபோல் ஒளித்து வைக்கப் பட்டிருக் கிறார்கள். இது எனக்குத் தெரியும், மிஸ்டர் கதிரேசன்! எவ்வளவு கேவலமான நிலை பாருங்கள்! படித்தவர் களிடமும் அறிவாளிகளிடமும் பயமும் கோழைத் தனமும் இருக்கிறவரை இந்தச் சமூகத்தில் உண்மைகளையும், நியாயங் களையும் யாரும் கெளரவிக்க மாட்டார்கள். சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட அச்சமும், பொதுநலத்திலிருந்து விலகி நிற்கும் தன்மையுமே இன்றுள்ள சமூகத்தின் சாபக் கேடுகள் சொந்த மகளைப் பறிகொடுத்து விட்டு அதற்காக