பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 181

வாய்விட்டு அழவும் முடியாமல் அடங்கிப் போய்விட்ட சற்குணம் தம்பதிகளிடம் போய் நீங்கள் என்ன தெரிந்து கொண்டுவிட முடியும் என்பதுதான் எனக்குப் புரிய வில்லை ? உங்களைப் போன்ற மாணவர்களின் நியாய உணர்வையும், போராட்ட மனப்பான்மையையும் நான் வரவேற்கிறேன். ஆனால் இப்படி மனப்பான்மைகளில் கூட நமக்கும், முந்தைய தலைமுறைக்கும் நடுவே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. அவர்கள் சத்தியம் வெல்லும் என்று சொல்லிவிட்டுச் சத்தியம் எப்படியும் தானாகவே வென்று கொள்ளும் என்ற நம்பிக்கையோடு திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார்கள். சத்தியம் தானாக வெல்லாது, அதற்காகப் போராட வேண்டும். அதற்காகத் தீவிரமாகப் பாடுபட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். நாம் மட்டும்தான் இதைப் புரிந்து கொண்டிருக்கிறோம்.”

இந்த டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து புரட்சிகரமான சிந்தனைகளை உடையவராக இருந்தார். அந்தக் கிராமத் தில் மற்றவர்களிடம் இருந்த பயம் அவரிடம் இல்லை. இளைஞராயிருந்தாலும் அவருடைய சிந்தனையில் முதிர்ச்சியும் வேகமும் இருந்தது. கதிரேசன் அவரைக் கேட்டான்!

“சார்! நீங்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும். இந்தக் கிராமத்தில் யாரைக் கேட்டாலும் மிஸ்டர் சற்குணம் விஷயமாகப் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். நீங்கள் தயவு செய்து எங்களை அந்த வாழைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றால் மிகவும் உபயோகமாயிருக்கும்.”

“வாழைத் தோட்டத்தைச் சுற்றிப் பலத்த காவல் இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் முயன்று பார்ப்போம். எல்லோரும் கூட்டமாக அங்கே போக முடியாது. உங் களை மட்டும் இன்றிரவு என்னோடு அங்கே அழைத்துப் போகிறேன். ஊரிலிருந்து நாலைந்து மைல் போக வேண்டும். உங்களுக்கு சைக்கிள் விடத் தெரியுமா?"