பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 187

“நீ என்ன சொல்றே பிச்சைமுத்து?” என்று பதறினார் சற்குணம். -

“சொல்றேன் சோத்துக்கு உப்பில்லேன்னு. உங்க மனசைத் தொட்டுப் பார்த்துக்குங்க. என்னன்னு உங்களுக்கே புரியும்.”

“மிஸ்டர் சற்குணம்! இப்போதுகூட ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை, மல்லிகைப் பந்தலிலே என்னைப் பயமுறுத்தி வற்புறுத்தல் செய்து எழுதி வாங்கினாங்க. நான் எழுதித் தந்தது உண்மையில்லேன்னு நீங்க சாட்சி சொன்னால் போதும். அதுக்கு நீங்க இணங்கினா மாணவர்கள் எல்லாரும் உங்களுக்கு நன்றியுடையவர்களா யிருப்போம்” என்று கதிரேசன் மீண்டும் வேண்டினான். சற்குணம் இதற்குப் பதிலே சொல்லவில்லை.

“உங்கள் முயற்சி பயனளிக்காது மிஸ்டர் கதிரேசன்! எனக் குத் தெரியும் ! நான் அப்போதே உங்களிடம் சொன்னேனே. அப்படி நடந்திருந்தால் நீங்கள் இவரிடம் எவ்வளவு கெஞ்சினாலும் பயன்படாது” என்றார் பிச்சை முத்து.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது மோட்டார் ரூமின் கதவு வெளிப்புறம் பலமாகத் தட்டப் பட்டது. உடன் இங்கே உட்புறம் இவர்கள் பேச்சுக் குரல் கள் எல்லாம் அப்படி அப்படியே நின்றன.

பதினைந்தாவது அத்தியாயம்

வெளியே கதவு தட்டப்பட்டதும் சற்குணம் பதறிப் போனார். அவர் கண்களில் பயமும் பதற்றமும் தெரிந்தன. ஆனால் பிச்சைமுத்து பதறவில்லை. மோட்டார் ரூமிலிருந்து பின்புறம் கிணற்றுக்குள் குழாய் போவதற்கு ஜன்னல் அளவுக்குத் துவாரம் இருந்தது. கதிரேசனுக்குத் தான் செய்யப் போவதைக் குறிப்புக்கள் மூலமே புலப்படுத்தி விட்டு அந்தத் துவாரத்தின் மூலம் உடலை வளைத்து