பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 17

செருப்புக்களைக் கழற்றி, “இந்தா இதை ரெண்டையும் வலது கையில் எடுத்துக் கொண்டு, லேக்ரோடில் மூன்று தரம் சுற்றிவிட்டு வா. நீ சுற்றுகிறாயா இல்லையா என்று பார்க்க நாங்கள் மூன்று பேரும் உன் பின்னாலேயே வருவோம்,” என்று பாண்டியனை அதட்டி னான். பாண்டியன் கையில் செருப்புக்களையும் திணித்து விட்டான். மூன்று முரட்டு உருவங்கள் அவனை நெருக்கிப் பிழிந்துவிடுவது போல் தொடர்ந்தன. பல்கலைக் கழகக் காம்பவுண்டுக்கு அப்பால் வெளியே மெயின் ரோட்டுக்கு வந்ததும் அந்தச் செருப்புக்கள் இரண்டையும் அப்படியே அன்பரசன் மூஞ்சியில் வீசி எறிந்துவிட்டு அருகிலிருந்த சைக்கிள் கடைக்குள் புகுந்துவிட்டான் பாண்டியன். முரட்டு மீசையும் பயில்வான் போன்ற தோற்றமுமாகச் சைக்கிள் கடையில் உட்கார்ந்திருந்த அண்ணாச்சியை அடைக்கலம் நாடி நடந்ததைச் சொன்னான் பாண்டியன். சைக்கிள் கடையில் தென்பட்ட படங்களும் அண்ணாச்சி யின் சுதேசிக்கோலமும் இந்த மனிதர் நமக்கு உதவுவார். என்ற நம்பிக்கையைப் பாண்டியனுக்கு அளித்திருந்தன. ‘விடுதி அறையில் சுவரிலிருந்த படத்தைக் காட்டி மண்டி யிடச் சொன்னார்கள்’ என்ற விவரத்தைக் கேட்டதும் அண்ணாச்சியின் கண்கள் சிவந்தன. அவரது மீசை துடித்தது. -

“ஒகோ!.. இது மேற்படி ஆட்கள் வேலைதான். ஒவ்வொரு வருசமும் நம்ம பையன்களிலேயே யாராவது ஒருத்தனை இப்படி வம்பு பண்றதே அவங்களுக்கு வழக்க மாப் போச்சு. நீங்கள் பேசாம இப்பிடி உட்காருங்கள் தம்பீ! இனிமே இதை நான் கவனிச்சுக்கிறேன்” என்று அவனுக்குப் பதில் கூறிய அண்ணாச்சி, கடைப்பையன் ஒருவனைக் கூப்பிட்டு ஏதோ சொல்லி, சைக்கிளில் துரத் தினார். அதற்குள் அன்பரசன் இருபது முப்பது மாணவர் களைக் கட்சி சேர்த்துக் கொண்டு அந்தக் கடையின் மேல் படையெடுப்பதுபோல் வந்துவிட்டான். ஆனால் என்ன ஆச்சரியம்! கடை வாசலில் அண்ணாச்சி நிற்பதைக்

ச.வெ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/19&oldid=609248" இலிருந்து மீள்விக்கப்பட்டது