பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 சத்திய வெள்ளம்

வெளியேறிக் குழாயைப் பிடித்துக் கொண்டு ஒசைப் படாமல் கிணற்றுக்குள் கீழ்நோக்கி இறங்கினார் பிச்சை முத்து. அவரைப் பின் தொடர்ந்து கதிரேசனும் அப்படியே செய்தான். ஒசை கேட்கும்படி தண்ணிரில் குதித்தும் விடாமல், மிகமிக மேற் பக்கமே தங்கியும் இருக்காமல் நடு ஆழம்வரை குழாயைப் பிடித்துக் கொண்டு இறங்கிச் சென்று திரிசங்கு நிலையில் அப்படியே தொங்கிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். சற்குணம் எவ்வளவுதான் பலவீனமான மனம் உடையவராயிருந்தாலும் தங்கள் இருவரையும் காட்டிக் கொடுக்கும் மோசமான காரியத் தைச் செய்யத் துணிந்து விடமாட்டார் என்ற நம்பிக்கை பிச்சை முத்துவுக்கு இருந்தது. அவரும் கதிரேசனும் தங்கள் உடம்புகள் ஒல்லியாயிருந்ததற்காக அன்று மகிழ்ச்சி யடைந்ததுபோல் அதற்கு முன்பு என்றுமே மகிழ்ந்த தில்லை. அறையிலிருந்து கிணற்றுக்குள் குழாய் போவதற்காக விடப்பட்டிருந்த பெரிய திறந்த ஜன்னல் போன்ற சதுரத் துவாரம் கொள்ளுமளவு ஒல்லியாயிராவிட்டால் அன்று அந்தக் கணத்தில் அவர்கள் தப்பியிருக்கவே முடியாது. பஞ்சாயத்துத் தலைவரின் ஆட்கள் ஏதோ கேட்டதும். கத்தியதும் சற்குணம் பதில் கூறியதும் குழாயைப் பற்றித் தொங்கிப் கொண்டிருந்த பிச்சை முத்துவுக்கும், கதிரேசனுக்கும் மங்கலாகக் கேட்டன. வந்து கதவைத் தட்டியவர்கள் அதிகமாகச் சந்தேகப்பட்டுக் கிணற்றுப் பக்கம் எல்லாம் புகுந்து தேடிப் பார்த்துக் கொண்டி ருக்கவில்லை. சற்குணம் சொன்ன பதிலிலேயே திருப்தி யடைந்து நம்பிக்கையோடு அவர்கள் திரும்பிச் சென்று விட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிந்தபின் மீண்டும் குழாய் வழியே மேலே ஏறிக் கிணற்றின் மேற் பகுதி விளிம்புச் சுவரில் தாவித் தொற்றி மீண்டார்கள், பிச்சை முத்துவும் கதிரேசனும், “மறுபடியும் அறைக்குப் போய் சற்குணத்திடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாமா?” என்று கதிரேசன் கேட்டபோது பிச்சைமுத்து அதைச் செய்ய வேண்டாமென்று மறுத்துவிட்டார். “சந்தர்ப்பம்