பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 191

களிடம் இந்த மாதிரியான சில புதிய நூல்கள் இருக்க வேண்டும்! தயவு செய்து இப்போது இதைப் பிரித்துப் பார்க்காதீர்கள். ஊரில் போய்ப் பாருங்கள். நம் சந்திப்பின் நினைவாக இந்த நூல்களை உங்களுக்கு அளிக்கிறேன்” என்று நன்றாக உறையிட்டுக் கட்டிய ஒரு புத்தகக் கட்டை அவனிடம் அளித்தார் பிச்சைமுத்து. மாணவர்களும், கதிரேசனும் லாரியில் புறப்படுவதற்குச் சில விநாடிகளுக்கு முன்புதான் அவர் அந்தக் கட்டை அளித்ததால் அவனா லும் உடனே அதைப பிரித்துப் பார்க்க முடியவில்லை.

“சார்! நீங்கள் எங்களுக்காக மிகவும் சிரமப்பட்டு விட்டீர்கள். எங்களால் இன்றிரவு உங்கள் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு விட்டீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்” என்று கதிரேசன் நன்றி கூறியபோது பிச்சைமுத்து அதை ஏற்க மறுத்தார்.

“உபசார வார்த்தைகள் எனக்குப் பிடிக்காது, மிஸ்டர் கதிரேசன்! ஒராயிரம் பொய்யான உபசார வார்த்தைகளை மதிப்பதைவிட மெய்யான துயரத்தினால் அரும்பும் ஒரு துளி கண்ணிரை அதிகம் மதிக்க வேண்டும். மறுபடியும் நாம் அடிக்கடி சந்திக்கலாம். இப்போது போய் வாருங்கள்” என்று அந்தச் சம்பிரதாய நன்றியை ஏற்காமல் சிரித்துக் கொண்டே அவர்களுக்கு விடை கொடுத்தார் பிச்சை முத்து. புறப்படுமுன் அவரால் தான் மிக அதிகமாக வசீகரிக் கப்பட்டிருப்பதைத் தனக்குத்தானே உணர்ந்தான் கதிரேசன். மறுநாள் அதிகாலையில் அவர்கள் மல்லிகைப் பந்தலை அடைந்தபோது மாணவர் பிரதிநிதிகளின் உண்ணா விரதம் இன்னும் தொடர்கிறது என்பது தெரிந்தது. அண் ணாச்சிக் கடை வாசலில் லாரியை நிறுத்தி இறங்கியதும் அவர்கள் முதலில் தெரிந்து கொண்ட செய்தியே இதுதான். இரண்டே நாட்கள் சமவெளிப் பகுதி கிராமத்தில் கழித்து விட்டு மீண்டும் மலைக்கு வந்திருந்ததால் குளிர் எப்போதையும்விட அதிகமாக உறைப்பது போலிருந்தது. இந்த இரண்டு மூன்று தினங்களில் மல்லிகைப் பந்தல் நகருக்குள் சில மாறுதல்கள் தெரிந்தன. பல்கலைக்கழக