பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 சத்திய வெள்ளம்

பகுதிக்கு வந்தார்கள் அந்த மாதர் சங்கத் தலைவி முதலிய வர்கள். அவர்களோடு கண்ணுக்கினியாளும் எழுந்திருந்து வந்தாள். களைப்பும், சோர்வும் மிகுந்த அந்த உண்ணா விரத நிலையிலும் அவள் மான் குட்டிபோல் துள்ளி நடந்து வந்து மாணவர்களை எல்லாம் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அந்த மாதர் சங்கத்தினருக்கு அறிமுகப் படுத்தி வைத்தாள். காதோரங்களில் சுருண்டு சுழலும் கேச மும், ஒளி திகழும் கண்களும், இனிய நளினப் புன்னகை யுமாக அவளைத் திடீரென்று மிக அருகில் பார்த்ததும் அப்போதுதான் முதன் முறையாகச் சந்திக்கும் ஒரு புதிய அழகியைப் போல் அவள் பாண்டியனின் பார்வையில் தோன்றினாள். வந்தவர்கள் மாலை சூட்டி விட்டுச் சென்ற பின்பும்கூடக் கண்ணுக்கினியாள் மாணவர்கள் அமர்ந்தி ருந்த பகுதிகளில் தங்கிப் பாண்டியனுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். பாண்டியன் அவனை வம்புக்கு இழுத்தான்;

“கண்ணே! உண்ணாவிரதம் தான் உன்னை இவ் வளவு கவர்ச்சியாகச் செய்ய முடியும் என்றால் நீ இன்னும் ஒரு வாரம் அதிகமாகக்கூட உண்ணாவிரதம் இருக்கலாம்.” “யாராவது கேட்டால் சிரிக்கப் போகிறார்கள். ‘கண்ணே, மூக்கே என்றெல்லாம் கூப்பிட இதென்ன பழைய வள்ளி திருமண நாடகமா, என்ன?”

“பின்னே வேறெப்படித்தான் கூப்பிடுவது உன்னை? சுருக்கியும் கூப்பிட முடியாமல் முழுசாகவும் கூப்பிட முடியாமல் உங்கப்பா இப்படி உனக்கொரு பெயர் வைத்துத் தொலைத்திருக்கிறாரே! இதற்கு நான் என்ன செய்வது? உன் பேரைச் சுருக்கிக் கூப்பிட்டா கண்ணேன்னுதான் வருது.”

“அதற்காக இத்தனை பேர் முன்னிலையில் இப்படிக் ‘கண்ணே’, ‘மூக்கேன்னு கொஞ்சத் தொடங்கிடறதுதான் நியாயமா?"