பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 195

“அதாவது இரகசியமாகக் கொஞ்ச வேண்டியதைப் பகிரங்கமாகக் கொஞ்சக் கூடாது என்கிறாயா? சபாஷ்!

நீ கெட்டிக்காரி...”

“இப்படியெல்லாம் பேசினால் நான் உடனே திரும்பிப் போக வேண்டியதுதான். நிலக்கோட்டைக்குப் போன கதிரேசன் குழுவினர் திரும்பி வந்து பேசிக் கொண்டி ருந்தார்கள்; என்ன சொன்னார்கள் என்று தெரிந்து கொள்ளலாமே என்று பார்த்தால் அதைச் சொல்லாமல் எதை எதையோ பேசி, நீங்கள் ரொம்பத்தான் விளையாடு கிறீர்கள்.”

“விளையாடுவதற்கு நாம் குழந்தைகள் அல்ல.” “இப்போதெல்லாம் குழந்தைகள் அதிகம் விளையாடு வதில்லை. நம்மைப் போன்றவர்கள்தான் அதிகமாக விளையாடிக் கொண்டிருக்கிறோம்.”

“இதைத்தான் அப்பா அம்மா விளையாட்டு என்கிறார் கள் பிரதர்” என்று நடுவே குறுக்கிட்டான் மோகன்தாஸ். அதைக் கேட்டு, “நான் போகிறேன். இனி இங்கே ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது என்னால்” என்று பொய்க் கோபத்தோடு விருட்டென்று எழ முயன்ற கண்ணுக் கினியாளைக் கையைப் பிடித்து இழுத்து அருகே உட்கார வைத்தான் பாண்டியன். அவள் உட்கார்ந்ததும், “அவன் மேலென்ன தப்பு: நீ விளையாட்டைப் பற்றிச் சொன்ன தனால் அந்த விளையாட்டின் பெயரைச் சொன்னான் அவன்” என்று மோகன்தாஸுக்குப் பரிந்து பேசிவிட்டுக் கதிரேசன் தெரிவித்த செய்திகளைப் பாண்டியன் அவளிடம் கூறினான்.

பாண்டியன் கூறியவற்றைக் கேட்டதும் அவள், “அந்தப் பெற்றோர் இப்படி நடந்து கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றாள். -

உடனே பாண்டியன், “யார்தான் அப்படி எதிர்பார்த் தார்கள்? நானும் கூடத்தான் அப்படி எதிர்பார்க்க வில்லை. நீயும் நானும் புத்திபூர்வமாக அளப்பதால் நம்