பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சத்திய வெள்ளம்

கணக்குப் பிசகிப் போய்விடுகிறது. ஆனால் இப்போ தெல்லாம் பணத்தை அளவுகோலாக வைத்து மனிதர்கள் நிறுக்கப் படுகிறார்கள். அந்த நிறுவையில் மிஸ்டர் சற்குணம் விலைக்குப் போய்விட்டார்.” என்றான்.

“அவர் எப்படியும் தொலையட்டும். உண்மை நமக்குத் தெரியும். இந்த அட்டுழியத்துக்குக் காரணமான விரிவுரை யாளரை இந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து துரத்துகிற வரையில் நாம் விடக்கூடாது.”

“அதுதான் உறுதியாயிற்றே!”

கண்ணுக்கினியாள் எழுந்து மாணவிகள் பகுதியில் திரும்பிப்போய் அமர்ந்து கொண்டாள். ‘பல்கலைக் கழகத்தை உடனே திறக்கவேண்டும் - மேரி தங்கத்தின் தற்கொலையை மூடி மறைக்காதே’ உடன் விசாரணைக்கு ஏற்பாடு செய்க’ - குற்றம் புரிந்தவர் யாராயிருந்தாலும் தண்டிக்கப்படுவதே நியாயம் - மந்திரிக்குச் சொந்த மானால் மனிதனுக்கு நியாயம் இல்லையா’ என்பது போன்று அங்கே எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகங் களைப் படித்தபடி எதிரே வந்து நின்ற கூட்டத்தில் சிலர் மாணவ நலநிதிக்காக அங்கே வைக்கப்பட்டிருந்த டப்பா உண்டியலில் காசுகளையும் ரூபாய் நோட்டுக்களையும் போட்டு விட்டுப் போனார்கள். பல்கலைக் கழக விரிவுரை யாளர்கள், பேராசிரியர்கள், டீன்கள், யாரும் உண்ணா விரதம் நடந்து கொண்டிருந்த பகுதியில் வந்து எட்டிப் பார்க்கவே இல்லை. பூதலிங்கம் மட்டும் யாருக்கும் அஞ்சா மல் யாரை நினைத்தும் கவலைப்படாமல், தொடர்ந்து இரண்டு மாலை வேளைகளில் அங்கு வந்து மாணவர் களைச் சந்தித்து அவர்களோடு அமர்ந்து கனிவாக உரை யாடி விட்டுப் போனார். துணை வேந்தரும் ரிஜிஸ்திராரும் மாணவர்கள் உண்ணாவிரதத்தால் மிகவும் பயந்து போயிருப்பதாகவும் பயத்தோடுதான் வி.ஸி. சென்னைக் குப் புறப்பட்டுப் போயிருப்பதாகவும், பூதலிங்கத்தோடு பேசியதிலிருந்து பாண்டியனுக்குத் தெரிந்தது. மேரி