பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சத்திய வெள்ளம்

நோன்பை அரசாங்கமே முறித்துவிட்டது. ஐ.பி.வி. 300-ன் படி பல்கலைக் கழக வாயிலில் உண்ணாவிரதம் இருந் தவர்கள் கைது செய்யப்பட்ட மாலை வேளையில் உடனே நகரப் பொதுமக்களிடமும், பெற்றோர்கள், தொழிலாளர் களிடமும் ஏற்பட்ட குமுறலையும் கொதிப்பையும் கூடப் போலீசார் தடையுத்தரவின் மூலம் ஒடுக்கிவிட்டார்கள். தடையை மீறியும் அவர்கள் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தத் துணிந்திருந்தார்கள். கட்சிச் சார்புள்ள அரசாங்கத் தினர் சட்டங்களையெல்லாம் தீயவர்களிடமிருந்து நல்லவர்களைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்துவதைவிடத் தங்கள் கட்சியையும், ஆட்சியையும் எதிர்ப்பவர்களிடமி ருந்து தங்களை மட்டுமே பாதுகாத்துக்கொள்ளப் பயன் படுத்தி விடுகிறார்கள். பெரும்பாலான சமயங்களில் சட்டங்களால் பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதில்லை. ஆட்சிகளும் ஆள்பவர்களுமே பாதுகாக்கப்படுகிறார்கள் என்ற உணர்வு அப்போது மல்லிகைப் பந்தல் நகர் முழுவதும் பரவியிருந்தது. அந்த நகரத்தில் அப்போது ஏற்பட்டிருந்த குமுறலையும் கோபத்தையும் போலீசாரின் தடையுத்தரவு மட்டுமின்றி இயற்கையும் வேறு சேர்ந்து கொண்டு தடுத்துவிட்டது. மாணவ மாணவிகள் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்ட தினத்தன்று இரவே மழைபிடித்துக் கொண்டுவிட்டது. மற்ற நகரங்களில் வரும் மழைக் காலத்துக்கும், மல்லிகைப் பந்தலைப் போன்ற மலை நாட்டு நகரம் ஒன்றில் வரும் மழைக்காலத்துக்கும் மிகுந்த வேறுபாடு இருந்தது. மல்லிகைப் பந்தல் நகரில் வரும் மழைக்காலம் என்பது தொடர்ந்து சில மாதங்களுக்கு நகரின் பொது வாழக்கை யையே அடங்கச் செய்துவிடக் கூடியது. புறாக்கூடுகளில் ஒடுங்கும் புறாக்களைப் போல் மக்கள் கம்பளிப் போர்வை களிலும் உல்லன் கோட்டுகளிலும் நனையாத மழை அங்கி களிலும், கணப்புகள் கதகதப்பாக எரியும் வீடுகளிலும், வெதுவெதுப்பான அறைகளிலுமே தங்கிவிடக் கூடிய காலம் அது. இந்த மாதங்களில் பல்கலைக் கழகத்திலிருந்து