பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 சத்திய வெள்ளம்

காலி செய்து மாணவர்களை விரட்டியதும் உடனே மாநிலத் தலைநகருக்குச் சென்றதும், திரும்பிய உடன் வரப் போகிற பட்டமளிப்பு விழாவுக்கு முன்பாக நல்ல மழைக் காலத்தில் அங்கே சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டியிருப் பதும் சந்தேகத்துக்கு உரிய காரியங்களாக மற்றவர்களுக்குத் தோன்றின. பொது மக்களிடையேயும், மாணவர்களிடை யேயும் பல வதந்திகள் உலாவின. அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.

உண்ணாவிரதப் பந்தலிலிருந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்ட பன்னிரண்டு பேரில் மாணவிகள் ஆறு பேரையும் இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ விடுவித்து விட்டார்கள். அதற்குள்ளேயே பத்திரிகைகளில் செய்திகளைப் பார்த்துவிட்டு உண்ணாவிரதம் இருக்கும் மகளின் நிலைமையை அறிவதற்காகக் கண்ணுக்கினி யாளின் தந்தை கந்தசாமி நாயுடு மதுரையிலிருந்து புறப் பட்டு வந்திருந்தார்.

கந்தசாமி நாயுடு மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் வந்து இறங்கினவுடன் நேரே அங்கிருந்து அண்ணாச்சி கடைக்குத்தான் போய்ச் சேர்ந்தார். பழைய நாடகக் கம்பெனி முதலாளியைச் சந்தித்ததில் அண்ணாச்சிக்கு மகிழ்ச்சி தலைகால் புரியவில்லை.

“உங்கள் தள்ளாத வயசிலே குளிர் காலத்திலே இந்த மலைக்காட்டு ஊரைத் தேடி நீங்கள் ஏன் அலையனும் நாயினா? எனக்கு ஒரு வரி எழுதியிருந்தீங்கன்னா செய்ய வேண்டியதை நானே செஞ்சிருப்பேனே?” என்று அவரை வரவேற்றார் அண்ணாச்சி. -

கந்தசாமி நாயுடு அதே சிவப்புக்கல் கடுக்கனும் கதர் மயில் கண் கரை வேஷ்டியும், முக்கால் கைச்சட்டையும், ராஜபார்ட் முக்க்களையும், முன் தலையில் வழுக்கையும், பிடரியில் சுருள் சுருளாக நரைத்த கிராப்புமாக முன்னை விடப் பத்து வயது முதுமையையும் ஏற்று, மாறாத புன்ன கையோடு விளங்கினார். தன்னைக் கும்பிட்ட அண் ணாச்சியை வாழ்த்திவிட்டு, “ஏதோ உண்ணா விரதம்னு