பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 205

“என்னம்மா? உன்னை ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நவராத்திரிக் கொலு வருது. நீ என்னவோ உண்ணாவிரதம் கிண்ணாவிரதம்னு இங் கேயே ஊரைக் கலங்கப் பண்ணிக்கிட்டிருக்கிறதா பேப் பர்லே பார்த்தேன். பயமாயிருந்தது. அதுதான் நானே புறப் பட்டு வந்திருக்கேன். இன்னிக்கே கடைசிப் பஸ்ஸிலே புறப் படலாமா? உன் செளகரியம் எப்பிடி? எனக்கு இந்த ஊர்க்குளிரு தாங்க முடியலே” என்று அவள் தந்தை உடனே பிரயாணத்தைப் பற்றிக் கூறினார்.

“நாயனா! இப்பிடி அவசரப்பட்டிங்கன்னா எப்படி முடியும்? தங்கச்சி, சிநேகிதிங்க கிட்டச் சொல்லிட்டுப் புறப்படனுமில்லே? கொஞ்சம் டயம் குடுங்க..” என்று அவள் கவலையை அந்தரங்கமாகப் புரிந்து கொண்டு அவள் சார்பாகத் தாமே நாயுடுவிடம் வேண்டினார் அண்ணாச்சி. அவரும் அவருக்கு இணங்கினார். தந்தையும் மகளும் அண்ணாச்சி கடையின் பின்புறம் இருந்த அறை யில் அரை மணிநேரம் குடும்ப விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அணண்ாச்சி அங்கேயே நாயுடுவின் பகல் உணவிற்கு ஏற்பாடு செய்தார்.

“நாயினா! நீங்க சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ளே நான் சொல்ல வேண்டியவங்களைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு வந்திடலாம்னு பார்க்கிறேன். நான் சாப்பிட்டாச்சு. நீங்க சாப்பிட்டதும் பகல் மூனரை மணிக்கு நேரா மதுரைக்கு ஒரு எக்ஸ்பிரஸ் பஸ் இருக்கு அதிலே போயிடுவோம்” என்று தந்தையிடம் கூறி விட்டு அண்ணாச்சியைத் தன்னோடு ஒரு நிமிஷம் வெளியில் வந்து போகுமாறு குறிப்புக் காட்டினாள் கண்ணுக்கினியாள். அண்ணாச்சி யும் அதைப் புரிந்து கொண்டு நாயுடுவை உள் அறையிலேயே விட்டுவிட்டு அவளோடு கடை முகப்புக்கு வந்தார். - இன்னும் விடுவிக்கப் படாமல் ஆஸ்பத்திரியில் போலீஸ் காவலிலேயே இருந்த பாண்டிய்னையும் மோகன் தாலையும் மற்ற மாணவர்களையும், சந்திப்பது எப்படி என்று அண்ணாச்சியிடம் கவலை தெரிவித்தாள் அவள்.