பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 சத்திய வெள்ளம்

ஆஸ்பத்திரியில் இருந்த போதும்கூட மாணவர்களும் மாணவிகளும் தனித்தனி வார்டுகளில் இருந்ததனால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாமல் போய் விட்டது. போலீஸ் காவலும் கடுமையாக இருந்தது. மாணவிகளை மட்டும் விடுவித்த பின்பும்கூட பாண்டியன் முதலியவர்களை மற்ற மாணவர்களோ, அரசியல் தொடர்புடையவர்களோ வந்து சந்திக்க முடியாமல் போலீஸார் தடுத்திருந்தனர். -

“அங்கே ஆஸ்பத்திரியிலே வார்டில் காவலுக்கு இருக்கிற போலீஸ்காரங்க அவ்வளவாக் கெடுபிடிக்காரங்க இல்லே. நான் போனப்ப அத்தனை தடையிருந்தும் என்னைப் பார்க்கவிட்டாங்க. நீயும் போய்ப் பாரு, தங்கச்சி! முடியலேன்னா என்கிட்ட வந்து நீ சொல்ல வேண்டியதை ஒரு லெட்டரா எழுதிக் குடுத்திட்டா நான் அதைத் தம்பிக்கிட்டச் சேர்த்திட முடியும்” என்றார் அண்ணாச்சி. அவளுக்கும் அதுதான் சரி என்று தோன்றி யது. தோழியின் வீட்டுக்குச் சென்று அவளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மழைக்குப் பாதுகாப்பாகக் குடை களோடு பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டுக்கு முதலில் போனாள் அவள். அவர் உதவி செய்தாலோ, உடன் வந்தாலோ ஆஸ்பத்திரியில் பாண்டியனைச் சந்திப்பது சுலபமாயிருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. அவளும் அவள் தோழியும் பல்கலைக் கழக ஆசிரியர் வீடுகள் இருந்த பகுதிக்குள் சென்று பேராசிரியர் பூதலிங்கத்தின் இல்லத்தை அடைந்தபோது அவருடைய மகள் கோமதிதான் ஹாலில் அமர்ந்து வீணை வாசித்துக் கொண்டிருந்தாள். அந்த மனத்துயரம் நிறைந்த வேளையில் விணை வாசிப்பதைக் கேட்பது இதமாக இருந்தது. “அப்பா இல்லையா கோமதி? எனக்கு ஒரு முக்கியமான காரியமாக உடனே அவரைப் பார்த்தாக வேண்டும். சாயங் காலம் நான் ஊருக்குப் போகணும்கிறதாலே இப்பவே வந்தேன்” என்று கண்ணுக்கினியாள் வினவியதும் “வி.ஸி. திடீர்னு ஸ்டாஃப் கவுன்ஸில் எமர்ஜென்ஸி மீட்டிங்குக்குக்