பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 207

கூப்பிட்டனுப்பி அப்பா போயிருக்கிறார். வர எவ்வளவு நேரமாகுமோ தெரியலையே?” என்று பதில் சொன்னாள் கோமதி.

இதைக் கேட்டதும் வெளியே யாருக்கும் தெரியாமல் பல்கலைக் கழக எல்லைக்குள் மாணவர்களின் இயக்கத் துக்கு எதிராக என்னென்னவோ நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. துணைவேந்தர் மிகவும் தந்திரமாகத் தம்மைக் காத்துக் கொள்ளும் காரியங்களில் முனைந்திருக் கிறார் என்பது புரிந்தது. இந்த வேளையில் பாண்டியன் முதலியவர்களோடு அங்கே தங்காமல் தான் மட்டும் ஊருக்குப் போகலாமா என்று அவள் மனம் மெல்லத் தயங்கியது. கோமதி மேலும் சில விவரங்களைக் கூறினாள்:

“உனக்குத் தெரியுமா கண்ணுக்கினியாள்? அந்த லெக்சரர் மதனகோபால் இங்கிருந்து பத்திரமாகத் தப்பிப் போவதற்கும் நம் வி.சி. சொல்லித்தான் போலீஸாம் வேண்டிய உதவிகளைச் செய்ததாம். காலையில் அப்பா வைத் தேடி ஜூவாலஜி டிபாரட்மெண்ட் தங்கராஜ் சார் வந்திருந்தார். தங்கராஜிடம் அப்பா சொல்லிக் கொண்டி ருந்தபோது நான் கேட்டேன். ஒழுக்கமில்லாதவர்களைப் பாதுகாத்துத் தப்பச் செய்து கொண்டே மற்றவர்களுக்கு அமைதியையும் ஒழுக்கத்தையும் உபதேசித்தால் யார்தான் நம்புவார்கள்? இந்த வி.ஸி. இரகசியமாக மதுரைக்குப் போய் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்குப் பறந்து அமைச்சரின் பிறந்த தின நாளில் அவருக்கு மாலை சூட்டி மலர்க் கிரீடம் வைத்து விட்டுத் திரும்புகிறார். பல்கலைக் கழகம் என்ற சுதந்திர அமைப்பின் தலைவராக நடந்துகொள்ளாமல், மந்திரிகளின் ஏஜெண்டுபோல் செயல்படுகிறார். தேர்தலில் வென்ற மாணவர்கள் அதைக் கொண்டாட அநுமதி கேட்டதற்குப் பல்கலைக் கழக எல் லைக்குள் கொண்டாடக் கூடாது’ என்று மறுத்து விட் டார். இப்போது வென்ற மாணவர்கள் தோற்று, மந்திரி களின் கட்சிக்கு வேண்டிய மாணவர்கள் வென்றிருந்தால் இவர் நிச்சயமாக இப்படி இடம் தர மறுத்திருக்கமாட்