பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 சத்திய வெள்ளம்

விரதம் இருந்தபோது நான் வந்து பார்த்தேன் இல்லையா? அதுவே விளமிக்குப் பிடிக்கவில்லை. இன்றைக்கு ஸ்டாஃப் கவுன்ஸில் மீட்டிங்கில், நம்மில் சில ஆசிரியர்கள் உண்ணா விரதம் இருக்கும் மாணவர்களைத் தூண்டிவிடுவதுபோல் அடிக்கடி போய்ப் பார்க்கிறார்கள். அது எனக்குத் தெரியும் என்று என்னை மறைமுகமாகக் குத்திக்காட்டிப் பேசினார் வி.ஸி. டாக்டர் பொழில்வளவனாரும், பண்புச் செழியனும் நாள் தவறாமல் வி.ஸி.யிடம் என்னைப் பற்றி கோள் சொல்லுகிறார்களாம். இதற்கெல்லாம் நான் பயப்பட வில்லை என்றாலும் நிலைமையை உணர்ந்து எச்சரிக்கை யாயிருக்கிறேன்” என்றார் பேராசிரியர் பூதலிங்கம். பேராசி ரியர் தங்கராஜும் கூட இருந்ததால் பூதலிங்கத்தினிடம் மேலும் அதிகமாக எதையும் பேச முடியாமல் போகவே சொல்லி விடை பெற்றபின் மழையோடு மழையாய்த் தன் தோழியோடு ஆஸ்பத்திரிக்குச் சென்றாள் கண்ணுக்கினி யாள், ஆஸ்பத்திரியில் பாண்டியனை அவளால் சந்திக்க முடியவில்லை. வேறு எந்த வெளி மாணவர்களும் உள்ளே காவலில் இருக்கும் அந்த ஆறு மாணவர்களைச் சந்திக்க முடியாமல் போலீஸ் காவல் விதிகள் கடுமையாக்கப்பட்டி ருந்தன. உடனே அவசரமாக அண்ணாச்சி கடைக்குத் திரும்பிப் பாண்டியனுக்கு ஒரு சுருக்கமான கடிதத்தை எழு திக் கொடுத்துவிட்டு அண்ணாச்சியையும் பஸ் ஸ்டாண்டு வரைஉடனழைத்துக் கொண்டு நாயினாவோடும், வழிய னுப்பவந்த தோழியோடும் ஊர் புறப்பட பஸ்ஸுக்குச் சென்றாள் அவள். மழை கடுமையாயிருந்ததால் பஸ் ஸ்டாண்டுக்குப் போய்ச் சேருவது சிரமமாயிருந்தது. எப்ப டியோ குடைகளைக் கொண்டு சமாளித்துப் பஸ் ஸ்டாண்டை அடைந்துவிட்டார்கள். நாயினாவையும், கண்ணுக்கினியாளையும், அவள் தோழியையும், மழைக்கு நனையாமல் நிற்க வைத்து விட்டு டிக்கட் வாங்கச் சென்ற அண்ணாச்சி கால் மணி நேரம் கழித்து வெறுங்கையோடு திரும்பி வந்து, “இருபத்தேழாவது மைலில் ஆடுகாத்தான் பாறைக்குப் பக்கத்திலே மலை சரிந்து பதினைந்து இருபது கெஜ தூரத்துக்கு ரோடு மண் மூடிப் போச்சாம்! நாளைச்