பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 211

சாயங்காலம்வரை பஸ் போகவோ, வரவோ முடியாதாம் தங்கச்சி! நாளன்னிக்குத்தான் பார்க்கணும். நாயினாவுக்கு இந்த ஊர்க் குளிரை இன்னும் கொஞ்சம் அனுபவிக் கணும்னு தலையிலே எழுதியிருக்கிறப்ப என்ன பண்ணலாம்?” எனறார.

பதினேழாவது அத்தியாயம்

மில்லிகைப் பந்தலிலிருந்து மதுரைக்குச் செல்லும் மலைப் பகுதிச் சாலையின் மண் சரிந்து மூடியதன் காரணமாகப் பிரயாணம் தடைப்பட்டதில் நாயினாவுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருந்ததோ அவ்வளவு மகிழ்ச்சி யாக இருந்தது கண்ணுக்கினியாளுக்கு. எப்படியாவது அந்தப் பிரயாணம் நின்று போய்விட வேண்டும் என்று தான் அவள் தவித்தாள். அவளுடைய தவிப்பும், ஏக்கமும் வீணாகவில்லை. பாண்டியனைப் பார்த்துச் சொல்லி விடைபெற்றுக் கொள்ளமுடியாமல் அவன் ஆஸ்பத்திரி யில் இருக்கும்போது, தான் மட்டும் நவராத்திரி மகிழ்ச் சியை நாடித் தந்தையோடு ஊருக்குப் போவதில் அவ ளுக்கு மனமேயில்லை. பிரயாணம் நின்று போகும்படி இருபத்தேழாவது மைலில் ஆடுகாத்தான் பாறைக்குப் பக்கத்தில் சரிந்த மலையை வாழ்த்தியது அவள் உள்ளம். அவர்கள் பஸ் நிலையத்துக்குச் செல்லும்போது இருந்ததை விட இப்போது மழை மேலும் அதிகமாயிருந்தது. காற்று வேறு சுழித்துச் சுழித்து வீசவே குடை பிடித்துக் கொண்டு நடந்தாலும் நனைந்துவிடும் போலிருந்தது! பிரயாணம் இல்லை என்று ஆனாலும்கூட மழை ஒரளவு குறைந்த பின்பே பஸ் நிலையத்திலிருந்து திரும்ப முடியும் என்று ஆகிவிட்டது. காற்றும் மழையும் அவ்வளவு கடுமை யாயிருந்தன.

பஸ் நிலையத்தில் பிரயாணிகள் தங்குவதற்காகப் போடப்பட்டிருந்த நீண்ட தகரக் கொட்டகையில் கூட ஓரங்களில் மழைச்சாரல் அடித்து நனைத்துக் கொண்டி