பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 213

இல்லாவிட்டால் இந்த வளைகளை அணிந்து கொண்டு ஒடுங்கள் என்று யாரிடம் அன்றைக்குச் சவால் விட்டாயோ அவரையே நினைத்து உருகும் பரம சாதுவாக நீதான் இன்று மாறிவிட்டாய்.”

கண்ணுக்கினியாள் தன் தோழியின் இந்த நளினமான அன்புக் குற்றச்சாட்டுக்கு மறுமொழி ஏதும் சொல்ல முடி யாமல் நாணித் தலை குனிந்தாள். மழை நீரின் கனத்தால் தலை கவிழும் ஒரு மெல்லிய பூவின் நிலையில் அப்போது அவள் இருந்தாள்.

அவளே சில விநாடி மெளனத்துக்குப் பின் தோழி சிவகாமியிடம், “ஊருக்குப் புறப்பட்டுப் போவதற்குள் எப்படியாவது அவரை ஒருமுறை பார்த்துப் பேசிவிட வேண்டுமடி சிவகாe! தற்கொலை முயற்சி என்று உண்ணாவிரதம் இருந்த எல்லாரையும் கைது செய்தது தான் செய்தார்கள். மாணவிகளாகிய நம்மை மட்டும் ஏன் உடனே விடுதலை செய்து தொலைத்தார்கள்? கைதாகி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாவிட்டாலும் ஒரே இடத்தில் இருக்கிறோம் என்ற திருப்தி மட்டுமாவது இருந்தது. இப்போது அந்த நிம்மதியும் இல்லாமல் நான் தவிக்கிறேன்.” என்றாள். -

“பின்னென்ன? காதல் என்பதே பரஸ்பரம் தவிப்பது தானே? மனமும் உணர்வுகளும் தவிப்பதைவிடப் பெரிய காதல் இந்த உலகில் வேறு எங்கே இருக்கப்போகிறது.”

“நீ சொல்வதைப் பார்த்தால் அவரும் அங்கே ஆஸ் பத்திரிக் கட்டிலில் என்னை நினைத்துத் தவித்துக் கொண் டிருப்பார் என்று ஆகிறது. எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை சிவகாe? ஆண்கள் எல்லோருமே கல் நெஞ்சுக்காரர்கள்! பல வேளைகளில் தங்களுக்காகத் தவித்து உருகும் பேதைகளை அவர்கள் சுலபமாகவும், வசதியாகவும் மறந்து விடுகிறார்கள்.”

“ஆனாலும் அந்தக் கல் நெஞ்சுக்காரர்களை நாம் மறக்க முடியவில்லை. நம்மை மறந்து விடுபவர்களையும் நாம் மறக்காமல் எண்ணி உருகும் கலப்பில்லாத அன்பைச் சகுந்தலை காலத்திலிருந்தே நாம் போற்றி வருகிறோம்."