பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சத்திய வெள்ளம்

“அப்படிப் போற்றி வருவதனால்தான் தலைமுறை தலைமுறையாகப் பல துஷ்யந்தர்கள் ஆணினத்தில் உருவாகி வருகிறார்கள். பெண்ணினத்தின் பேதமைக்குச் சகுந்தலையும் ஆணினத்தின் சோர்வுக்கு துஷ்யந்தனும் நிலையான உருவகங்கள்.”

“பயப்படாதே கண்ணுக்கினியாள்! பாண்டியன் அப்பழுக்கில்லாதவர். அவர் ஒரு நாளும் துஷ்யந்தன் ஆகி விடமாட்டார். நீ பாக்கியசாலி. இந்தப் பல்கலைக் கழகத் தில் காதலிக்கிற எத்தனையோ மாணவிகளுக்கு எத் தனையோ அழகான மாணவர்கள் கிடைப்பார்கள். காத லும் நிகழும். அது பெரிய காரியமில்லை. ஆனால் நீயோ மாணவர்கள் பல்லாயிரம் பல்லாயிரம் பேருக்குத் தலை வராகிற ஒரு தன்மானம் மிக்க மாணவரை உன் தலை வனாக்கிக் கொண்டிருக்கிறாய். நீ ஒரு மாணவரின் அன்புச் சிநேகிதி மட்டும் இல்லை. ஒரு தலைவனின் அன்புத்தோழி என்பது பெருமைக்குரியது.”

வகுப்புத் தோழி சிவகாமி இப்படிக் கூறிக் கொண்டி ருந்தபோது வெளியே பெய்து கொண்டிருந்த மழை தணியத் தொடங்கியிருந்தது. அதற்குப் பதில் கண்ணுக் கினியாளின் உள்ளத்தில் ஆனந்தமழை பெய்யத் தொடங் கியிருந்தது. அவள் இதயம் உடனே ஒடிச் சென்று பாண்டி யனைக் காணத்துடித்தது. ஏற்கெனவே அண்ணாச்சியிடம் எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தைத் திருப்பி வாங்கி இன்னும் விரிவாக எழுதிக் கொடுத்துவிட விரும்பின்ாள் அவள். அவர்கள் பஸ் ஸ்டாண்டிலிருந்து திரும்பும்போது நன்றாக இருட்டி விட்டது. மஞ்சு மூட்டத்தில் தெரு விளக்குகள் மங்கலாக மினுக்கத் தொடங்கியிருந்தன. ‘பிளவர்ஸ் கார்னரிலும் ஏரியை ஒட்டிய சாலைகளிலும் இருளோடு இருளாகக் குடைகள் நகர்ந்து கொண்டிருந்தன. மஞ்சு மூட்டத்தில் ஆட்கள் தெரியாமல் குடைகளே நடப்பது போல் தோன்றிய காட்சி வேடிக்கையாக இருந்தது. ஏரியிலே போட் கிளப் கட்டிடமும் படகுத் துறைகளும் வெறிச் சோடிக் கிடந்தன. பல்கலைக் கழக காம்பஸ்-க்குள் இருந்த