பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 சத்திய வெள்ளம்

உட்கார்ந்து கடை வரவு செலவைக் கவனிக்கத் தொடங் கினார் அண்ணாச்சி. கடைப் பையன்களின் ஒருவன் நாயுடுவின் கட்டிலருகே அங்கிருந்த பெஞ்சுகளில் இரண்டை இணைத்துப் போட்டு விரிப்பு கம்பளியெல் லாம் போர்த்தி அண்ணாச்சிக்காக ஒரு படுக்கை ஆயத்தம் செய்து கொண்டிருந்தான். வெளியே மழை வலுத்து இருந்தது. அலுப்பு அதிகமாக இருந்ததாலோ அல்லது தள் ளாமை காரணமாகவோ நாயுடு படுத்த உடனேயே இழுத் துப் போர்த்திக் கொண்டு தூங்கி விட்டார். மழை நிற்கும் என்று அதிக நேரம் எதிர்பார்த்தும் நிற்காத காரணத்தால் கடைப் பையன்கள் மழைக் கோட்டுகளை அணிந்து கொண்டு குடையோடு புறப்பட்டுப் போய்விட்டார்கள். பையன்கள் போனதும் உள்ளே இருந்தபடியே கடை முகப்பை அடைக்கும் இரும்பு வுட்டரை இறக்கிவிட்டு விட்டு விளக்கை அணைப்பதற்காகச் சென்ற அண்ணாச்சி வெளிப்புறம் இரும்பு அடைப்புத் தட்டப்படுவதைக் கேட்டு ஸ்விட்சை “ஆஃப் செய்யாமலேயே மறுபடி ஷட்டரைத் துாக்கினார். வெளியே மழைக் கோட்டும் குடையுமாக அண்ணாச்சிக்கு மிகவும் வேண்டியவரான போலீஸ் கான்ஸ்டேபிள் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அப்போது போலீஸ் உடையில் இல்லை. ஆனால் அவசரமாகவும், பரபரப்பாகவும் காணப்பட்டார். ‘வாங்க தம்பீ! ஏது இந்த அடை மழையிலே ? இந்நேரத்துக்கு இந்தப் பக்கமா வந்தீங்க..” என்று அண்ணாச்சி அவரை வரவேற்றார். அவர் உள்ளே வந்து கொண்டு, “முதல்லே ஷட்டரைப் போடுங்க... அப்புறம் பேசலாம். ரொம்ப முக்கியமான காரியமாகத்தான் வந்தேன். உங்க காதிலே போட ஒரு விஷயம் இருக்கு. அவங்க பண்ற அக்கிரமம் என் மனசு பொறுக்கலே. நான் வந்து செர்ன்னேனின்னு மட்டும் வெளியிலே வரப்படாது. ஆனா விஷயம் உடனே உங்களுக்குத் தெரியணும்.”

“என்ன விஷயம் சொல்லுங்க தம்பீ! பையங்க சமாசாரம்தானே?"