பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 217

“ஆமாங்க அண்ணாச்சி! செக்ஷன் திரி நாட் நயன்லே பிடிச்ச ஆறு பையன்களிலே ரெண்டு பேரைக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே விடுதலை பண்ணிட்டாங்க. ஆனா மாணவர் யுனியன் தலைவன், காரியதரிசி, உப தலைவன், உப காரியதரிசின்னு முக்கியமான போஸ்ட் களிலே இருக்கிற பையன்க நாலு பேர் மேலேயும் கிரி மினல் கான்ஸ்பிரஸின்னு சார்ஜ் பிரேம் பண்ணி ஆஸ் பத்திரியிலேருந்து ஜெயிலுக்கு மாத்திட்டாங்க. அந்தப் பையன் பாண்டியனோட ஹாஸ்டல் அறையிலே வெடி மருந்துச் சாதனங்களும், நாட்டு வெடிகுண்டு தயார் செய்யற திட்டமும் இருந்ததைக் கண்டுபிடிச்சாங்களாம். மோகன்தாஸ் ரூமிலே வைஸ்சான்ஸ்லரையும் ரிஜிஸ்திரா ரையும் கொலை செய்ய வேண்டுமென்று பல மாணவர் கள்கூடி இரத்தத்திலே கையெழுத்திட்ட கடிதாசு போலீஸ் ‘செர்ச்சிலே கிடைச்சுதாம். மத்த ரெண்டு பேர் அறையிலே யூனிவர்ஸிடி டவர் கிளாக்கை வெடி வைச்சுத் தகர்க்கிறது சம்பந்தமாகக் கடிதாசு கிடைச்சிருக்காம்.”

“இதெல்லாம் என்ன கதை தம்பீ! யாரைக் கவிழ்த்து விட இந்த மோசடி வேலை எல்லாம் பண்றாங்க..?”

“கதைதான் அண்ணே! யூனிவர்ஸிடி யூனியன் எலெக் ஷன்லேயே இந்தப் பையங்க ஜெயிச்சது அவங்களுக்குப் பிடிக்கலே, ஜெயிச்சவங்களை எதிலியாவது மாட்டி வைக் கணும். இவங்க ரூம்களிலே அவங்களா எதை எதையோ கொண்டு போய்ப் போட்டு வேணும்னே வம்புலே மாட்டி வைக்கிறாங்க. இதுக்கு வி.ஸி. ரிஜிஸ்திரார், ஆர்.டி.ஓ., போலீஸ் எல்லாம் உடந்தை. எனக்கு மனசு கேட்கலை. உங்க காதிலே போட்டிட்டுப் போகலாம்னுதான் மழை யோட மழையா ஒடியாந்தேன்.”

“வேண்டியவங்க செய்கிற தீமைகளைப் பாதுகாக் கவும், வேண்டாதவங்க செய்கிற நன்மைகளை ஒடுக்கவுமே அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகிற வரையில் அதிகாரங் களை எதிர்க்கிற மனப்பான்மை தவிர்க்க முடியாத ஒரு பொதுச் சக்தியாக இங்கே இருந்தே தீரும். நீ வந்து