பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சத்திய வெள்ளம்

மொழிபவர் எல்லோரும் கையெழுத்துப் போட்டாச்சு. நீங்க கையெழுத்துப் போட வேண்டியதுதான் பாக்கி” என்று அபேட்சை மனுவை நீட்டினார்.

“என்னாலே முடியாது அண்ணாச்சி. எனக்கு இது ஸ்ெகண்ட் இயர். ஸெகண்ட் இயர், தேர்ட் இயர் பூரா படிப்பிலே கவனம் செலுத்தலாம்னு இருக்கேன்.”

“படிப்பிலே நல்லா கவனம் செலுத்துங்க.. ஆனா அதோட இதுவும் இருக்கட்டும்.”

“நீதான் இருக்கணும் பிரதர்.” - “உன்னை நம்பி இங்கே ஒரு பெரிய இயக்கமே காத்துக்கிட்டிருக்கு அப்பா! நீயே மாட்டேன்னா எப்படி?” “இல்லே. தயவுசெய்து என்னை விட்டுடுங்க. நான் எந்த வம்பும் வேண்டாம்னு பார்க்கிறேன்.”

“பிளிஸ் அக்ஸெப்ட் இட் அண்ட் லைன்.” அண்ணாச்சி நாமினேஷன் தாளை அவன் முன் வைத்து, “நான் இவ்வளவுதான் சொல்லலாம். இனி உங்க பாடு, உங்க நண்பர்கள் பாடு” என்று சொல்லி விட்டு முன்புறம் கடையைக் கவனிக்கப் போய்விட்டார். தாளில் வழி மொழிபவர்களின் பெயர்களை வரிசையாகப் படித்துக் கொண்டு வந்தவன், ‘கண்ணுக்கினியாள் என்ற பெயரைப் படித்ததும் அது யாராக இருக்கும் என்ற வினா மனத்தில் எழப் பெண்கள் பக்கம் நிமிர்ந்து பார்த்தான். தனக்கு ஏற்கெனவே அறிமுகமான பெண்களின் பெயர் களைத் தவிர மீதமிருந்தவள் அந்தப் புதியவள் தான். அவள் பெயர்தான் கண்ணுக்கினியாளாக இருக்க வேண்டு மென்று பாண்டியன் புரிந்து கொண்டான். அந்தப் பெயருக்கும் அவள் தோற்றத்துக்கும் இருக்கிற பொருத் தத்தை அவன் வியந்து கொண்டிருந்தபோதே அதற்குப் பொருத்தமில்லாத ஒர் அதிகப்பிரசங்கித்தனமான காரியத்தை அவள் செய்தாள்.

ஒரு தந்தப் பதுமை துள்ளி எழுந்திருப்பதுபோல் தன் இடத்திலிருந்து எழுந்து தன்னுடைய முன் கைகளை அணி செய்த வளையல்களில் இரண்டைக் கழற்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/22&oldid=609315" இலிருந்து மீள்விக்கப்பட்டது