பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 சத்திய வெள்ளம்

அண்ணாச்சியும் கண்ணுக்கினியாளும் சிவகாமியும் சென்றார்கள். நாயினாவும் வருவதாகச் சொன்னார்.

“மழையா இருக்கு! நீங்க என் சிரமப்படனும்? நீங்க இங்கேயே இருங்க” என்று அவரைத் தடுத்துவிட்டார் அண்ணாச்சி. மழையோடு மழையாக மாணவர்களைச் சந்திக்கச் சிறைச் சாலைக்குச் சென்றார்கள் அவர்கள். மாணவர்களுக்குக் கொடுப்பதற்காகப் பிஸ்கெட் பொட்ட லங்கள், ஆப்பிள், ஹார்லிக்ஸ் என்று ஏதேதோ வாங்கிக் கொண்டாள் கண்ணுக்கினியாள். இரவெல்லாம் கண் விழித்துப் பாண்டியனிடம் சேர்ப்பதற்காக அவள் எழுதிய கடிதம் வேறு இருந்தது. அந்தக் கடிதத்தை எழுதிய போது இருந்த உற்சாகம் இப்போது அவளிடம் இல்லை. ஆஸ்பத்திரியில் கொடுக்கலாம் என்று எழுதிய கடிதத்தைச் சிறைச்சாலையில் கொடுக்க நேரிடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அப்போது அவள் ஒரு நிலைக்குமேல் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுதே விட்டாள். சிவகாமிக்கும், அண்ணாச்சிக்கும் அவளை அழுகையிலிருந்து தவிர்த்துச் சகஜ நிலைக்குக் கொண்டு வருவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.

“நேற்றே பூதலிங்கம் சார் ஜாடையாகச் சொல்லியது பலித்துவிட்டது அண்ணாச்சி! ‘ஜெயித்த மாணவர்கள் மேல் என்னென்னவோ பொய்க் குற்றச்சாட்டுக்களை யெல்லாம் சுமத்துவதற்கு ஏற்பாடு நடக்கிறது. இதெல்லாம் எங்கே போய் நிற்கும் என்றே தெரியவில்லையம்மா என்று அவர் நேற்றுச் சொன்னது இன்று நடந்து விட்டதே?” என்று புலம்பிக் கண்ணிர் உகுத்தாள் கண்ணுக்கினியாள். சிறைச்சாலையில் அவர்கள் மாணவர்களைச் சந்திக் கக் கால் மணி நேரம் அநுமதி தரப்பட்டிருந்தது. பாண்டி யனைப் பார்த்ததும் கண்ணுக்கினியாள் மறுபடியும் கண் கலங்கி அழத் தொடங்கிவிட்டாள்.

சிறைக்கம்பிகளுக்கு வெளியே கையை நீட்டி அவள் கண்ணிரைத் துடைத்தபடி பாண்டியன் சொன்னான்: