பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 225

நடந்தன. அவர்களுக்குப் படிக்கக் கொடுக்கப்பட்ட செய்தித் தாள்களில் மாணவர் இயக்கம், மாணவர் போராட் டம், மல்லிகைப் பந்தல் நிகழ்ச்சிகளுக்கு எதிரொலியாக நாடெங்கும் நடந்த ஊர்வலங்கள், கண்டனங்கள் பற்றிய பகுதியை சென்ஸார் செய்து தாரினால் பூசி அடித்துப் படிக்க முடியாமல் செய்து மறைத்தே கொடுத்திருந் தார்கள். ஆகவே செய்தித் தாள்களில் மூன்று நிமிஷங் களுக்கு மேல் படிக்க எதுவுமே இல்லை. உணவோ படுமோசமாயிருந்தது.

காலையில் அவள் கொடுத்த அந்தக் கடிதத்தைத்தான் அவன் திரும்பவும் திரும்பவும் படித்தான். அருகே இல் லாத பெண்ணின் ஞாபகம் எப்படி ஒவ்வொரு முறை நினைக்கும் போது அந்நியமாகிறதோ அப்படியே அந்தக் கடிதமும் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அந்நியமா கவும் புதுமையாகவும் இருந்தது பாண்டியனுக்கு.

.."முதன் முதலாக உங்களுக்கு எழுதும் இந்தக் கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்றே எனக்குத் தெரிய வில்லை. எந்தப் பிரியமான வார்த்தையினால் உங்களை அழைப்பது என்றும் புரியவில்லை, எந்த வார்த்தையினால் நான் உங்களை அழைத்தாலும் அந்த வார்த்தையை எந்த ஒரு காதலியாவது எனக்கு முன்னும் தன் காதலனுக்கு எழுதும் முதற் கடிதத்திலோ, அடுத்தடுத்த பல கடிதங் களிலோ உபயோகப் படுத்தித்தான் இருப்பாள். நான் உங்களுக்கு மட்டுமே தேடி உபயோகப்படுத்த ஒரு தனி வார்த்தை கிடைக்கப் போவதில்லை. வார்த்தைகள் எல்லாமே இப்படிப் பலர் சொல்லிப் பயன்படுத்திப் பயன் படுத்தித் தேய்ந்து போனவைதாம். தேயக் கூடாத நம் பிரியத்தைத் தேய்ந்த வார்த்தைகளால் அழைக்க விரும்ப வில்லை நான். வார்த்தைகளால் விவரிக்க முடியாத பிரியத்தோடு தவிப்போடும், வேதனையோடும், இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதத் தொடங்குகிறேன். நேற்றிரவு நவநீத கவியின் வருங்காலக் காதலர்களுக்கு என்ற கவிதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருந்தேன்.

ச.வெ-15