பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 229

நகரப் பிரமுகர்கள் எல்லாரும் முனைந்து நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. போராட்டக் குழுவினரும் மாணவர் பிரதிநிதிகளும் முதலில் துணை வேந்தரையும், ஆர்.டி.ஒ.வையும் சந்தித்தனர். அதற்குள் எல்லா ஊர் களிலும் பரவிய போராட்டத்தினால் அங்கங்கே அரசு பஸ்கள் சில எரிக்கப் பட்டன. இரயில்கள் நிறுத்தப் பட்டன. மதுரை, கோவை, திருச்சி நகரங்களில் மாணவர் கூட்டத்தைக் கலைக்க கண்ணிர்ப் புகை வீச்சு நடந்து போலீஸ் அடித்தடியில் சில மாணவர்கள் காயமுற்றனர். சென்னையிலும் போராட்டம் வளர்ந்தது. அரசாங்கம் ஸ்தம்பிக்கும் நிலை வந்தது. மேரி தங்கத்தின் தற்கொலைக் குக் காரணமான விரிவுரையாளர் மதனகோபாலை உடனே பல்கலைக் கழகத்திலிருந்து நடவடிக்கை எடுத்து வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பாண்டியன் முதலிய மாணவர்கள்மேல் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை நிபந்தனையின்றி உடனே வாபஸ் வாங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த இரண்டு கோரிக்கைகளை ஏற்றால் ஒழியப் போராட்டம் நிற்காது என்றும் மாணவர்கள் தரப்பில் வற்புறுத்தப் பட்டது. மணவாளன் மதுரையிலிருந்து எல்லா ஊர் களோடும் தொடர்பு கொண்டு போராட்டத்தை முழு மூச்சுடன் நடத்த உதவி செய்தார். மல்லிகைப் பந்தலின் துணைவேந்தர் நாலைந்து நாட்களாக வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சும்படி ஆகியிருந்தது நிலைமை. அண்ணாச்சியின் உதவியால் நாயினாவை மேலும் சில தினங்கள் மல்லிகைப் பந்தலிலேயே தங்கச் செய்து விட்டாள் கண்ணுக்கினியாள். கல்வி மந்திரி மல்லிகைப் பந்தலுக்கு அவசரம் அவசரமாகப் பலத்த போலீஸ் பாது காப்புடன் வந்தார். நகர எல்லையிலேயே அவருக்குக் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புக் குரல்களை முழங்கி னார்கள் மாணவர்கள். துணைவேந்தர் கல்வி மந்திரி ஆகியவர்கள் கலந்து பேசி மாணவர்களின் இரு கோரிக் கைகளையும் ஏற்றனர். மேரிதங்கத்தின் தற்கொலைக்குக்