பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 சத்திய வெள்ளம்

என்று நாயுடுவைக் கூப்பிட்டுக் கொண்டு அனுமார் கோயிலுக்குப் புறப்பட்டார் அண்ணாச்சி.

“அப்படியா நேத்தே ஏன் சொல்லல்லே அதை ?” என்று அனுமார் கோயில் ஒன்று மல்லிகைப் பந்தலில் இருப்பதை இவ்வளவு தாமதமாகத் தெரிவித்ததற்காக அண்ணாச்சியைக் கண்டித்தபடியே உடன் புறப்பட்டு விட்டார் நாயுடு. அவர்கள் இருவரும் அனுமார் கோயிலுக் குப் புறப்பட்டுப் போனபின் கண்ணுக்கினியாளும், பாண்டியனும் கடையிலிருந்து ஏரிக்கரைப் பூங்காவுக்குப் புறப்பட்டார்கள். மேகம் இருண்டு கொண்டு மூட்டம் போட்டிருந்தது என்றாலும் மழை இல்லை. இப்போதோ, இன்னும் சிறிது நேரத்திலோ வந்து விடுவேன் என்பது போல் மழை வானிலே மிரட்டிக் கொண்டிருந்தது. அவர் கள் ஏரிக் கரையில் நடந்தார்கள். பாண்டியன் சொன் னான்: “என்ன இருந்தாலும் அண்ணாச்சி மிகவும் பரோ பகாரி! நாம்கூட ஒருநாள் அந்த அனுமாரைப் போய்ப் பார்த்துக் கும்பிட்டுவிட்டு வரவேண்டும். அவர் தயவில் தான் நமக்கு இன்று இந்தச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.” “அனுமாரை நீங்க கும்பிட்டு என்ன ஆகப்போகிறது? பெண்கள் கும்பிட்டாலாவது நல்ல இடத்தில் கல்யாணம் ஆகும் என்பார்கள்” என்று சொல்லத் தொடங்கிவிட்ட கண்ணுக்கினியாள் பாதியிலே எதையோ நினைத்துக் கலீரென்று சிரித்து விட்டாள்.

“உன் கேஸ் அனுமாரிடம் எடுபடாது, நீதான் காதல் கடிதம் எழுதுகிற எல்லைவரையில் வந்தாயிற்றே?” என்று கேட்டுக் கொண்டே, “இந்தக் கைதானே அதை எழுதியது:” என்று சொல்லியபடி அவள் வலது கையைப் பற்றி அழுத் தினான் பாண்டியன். அவள் செல்லமாகத் திமிறினாள்.

“ஏதேது? கேள்வி முறை இல்லை போலிருக்கிறதே? கையை விடுங்கள் முதலில்...” -

“பிரியமுள்ளவளின் பூங்கையை அவள் பிரியத்துக் குரியவன் பற்றக்கூடாது என்று தான் நவநீத கவி வருங் காலக் காதலர்களுக்கு எழுதியிருக்கிறாரோ?"