பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 233

“அந்தக் கவிதை உங்களுக்குப் பிடித்திருந்ததா?” தன் னைப் பற்றிய அவன் கையை விலக்கிவிடாமலே கேட்டாள் அவள். அவன் பதில் சொன்னான்:

“அந்தக் கவிதையைவிட அதை மீண்டும் பிரதி எடுத்து எழுதியவளை எனக்கு ரொம்பப் பிடித்தி ருக்கிறது.”

ஏரிக்கரைப் பூங்காவில் இருந்த ஒரு பட்டு ரோஜா வைப் பறித்து அவள் கையில் வைத்தான் பாண்டியன்.

“ஜாக்கிரதை’ என் கைக்கும் ரோஜாப் பூவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்று நீங்களே ஒரு தடவை சொல்லியிருக்கிறீர்கள்.”

“உனக்கு ரொம்பப் பொலலாத ஞாபக சக்திதான்.” “நீங்கள் சொன்னதெல்லாம் மட்டும் மறப்பதில்லை” பூங்காவின் மரங்கள் அடர்ந்த பகுதிக்கு அவர்கள் வந்திருந் தார்கள். பாண்டியனின் கரம் இப்போது அவள் தோள் மேல் இருந்தது. “உஷ்! அதோ..” என்று அவன் தழுவலி லிருந்து விலகிய அவள் சுட்டிக்காட்டிய திசையில் மாண வர் கூட்டம் ஒன்று போய்க் கொண்டிருந்தது. பூங்காவில் இவர்களைப் போலவே சில இளம் இணைகள் அங்கங்கே அமர்ந்தும் நின்றும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“உன் கையில் போடுவதற்கு என்னிடம் நீயே கொடுத் திருக்கும் இரண்டு வளைகள் இன்னும் பத்திரமாக இருக் கின்றன என்பது உனக்குத் தெரியுமா?”

“காணாமற் போன பொருள்கள் யாரிடமாவது இருந்தால் பல்கலைக் கழக விதிப்படி அவற்றை ரிஜில் திரார் ஆபீஸில் ஒப்படைத்துவிட வேண்டும்.”

“அப்படியானால் என் வசம் இருக்கும் வளைகளை விடப் பெரிய பொருளான உன் இதயத்தையும் அங்கே ஒப்படைத்துவிட வேண்டியதுதான்.”

“தப்பு! தப்பு மன்னித்துவிடுங்கள். தெரியாமல் சொல்லிவிட்டேன்."