பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 237

வரைப் பிடிக்க வேண்டுமானால் அவர் பெரிய ஆளாகத் தான் இருக்க வேண்டும்! இந்தத் தகவல்கூட அவர் மூலம்தான் உனக்குத் தெரிந்ததா, கதிரேசா ?”

“இல்லை பாண்டியன்! இது ரிஜிஸ்திரார் ஆபீஸ் மூலம் நான் கேள்விப்பட்டது. இதற்கும் பிச்சைமுத்து சாருக்கும் சம்பந்தமில்லை.”

“நீ சொல்கிறபடியே நடப்பதாக இருந்தாலும் நாளை மாலைக்குள் அது தெரிந்துவிடுமே. நாளைக்கும் இங்கே தங்கியிருந்துவிட்டுத்தான் அப்புறம் நான் ஊர் போகலாம் என்றிருக்கிறேன்! எதற்கும் நாளை மாலையில் மறுபடியும் சந்தித்துப் பேசலாம். மறந்துவிடாமல் நாளை மாலை இங்கே வா...” என்று சொல்லிக் கதிரேசனுக்கு விடை கொடுத்து அனுப்பினான் பாண்டியன்.

அன்றிரவே அவனும் வேறு சில மாணவர்களும் பூதலிங்கத்தைச் சந்தித்தபோது கதிரேசன் கூறியதுபோல் நடப்பதற்குச் சாத்தியம் உண்டு என்றே அவரும் கூறினார். மாணவர்கள் இது பற்றித் தாங்கள் என்ன செய்யலாம் என்று கூடிக் கூடிப் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். பாண்டியன் மறுநாள் இரவுக்குள் மதுரையில் வந்து சந்திப்பதாக ஒரே தந்தியின் பிரதிகளை மணவாளனுக்கும், கண்ணுக்கினியாளுக்கும் அனுப்பினான். அன்றிரவு சக மாணவன் ஒருவனுடைய வீட்டில் அவனும் நண்பர்களும் கலந்து பேசினார்கள். மறுநாள் தெரிய வேண்டிய விவரங்கள் தெரிந்தபின் மேற்கொண்டு செயற்பட முடிவு செய்தார்கள். பாண்டியன் அன்றிரவு அந்த நண்பனின் வீட்டில் தங்கினான்.

முதல் நாள் இரவிலிருந்தே பல்கலைக் கழக விருந் தினர் மாளிகையில் பல அறைகள் நிரம்பிவிட்டன. வெளி யூர்களிலிருந்து வரவேண்டிய சிண்டிகேட் உறுப்பினர்கள் எல்லாரும் வந்துவிட்டார்கள். துணைவேந்தரும், சிண்டி கேட்டில் முக்கிய உறுப்பினரான ஓர் எஸ்டேட் அதிபரும் மற்ற உறுப்பினர்களை வசப்படுத்தத் தீவிரமாக முயன்று