பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சத்திய வெள்ளம்

அண்ணாச்சி, நாயுடு குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர்.”

“பெயரே நட்சத்திர அந்தஸ்தில்தான் இருக்கிறது” என்று நண்பனின்காதருகே முணுமுணுத்தான் பாண்டி யன். அப்போது அவளே அவனருகில் வந்து, அவன் தேர்தலில் நிற்க இணங்கியதைப் பாராட்டும் வகையில், “நன்றி” என்றாள். அவனும் விடவில்லை.

“நீங்கள் கொடுத்திருக்கும் அன்பளிப்பு என்னிடம் பத்திரமாக இருக்கும். அதை எப்போது திருப்பித் தரவேண்டுமோ, அப்போது திருப்பித் தருவேன்!”

“ஓ! வளையல்களைச் சொல்கிறீர்களா?” அவள் அவன் உள்ளத்தைச் சூறையாடுவது போல் சிரித்தாள். உரையாடலை வேறு பககத்தில் திருப்ப விரும்பினான் பாண்டியன். “இந்த ஊர் குளிர்ப் பிரேதசம். இவ்வளவு பெரிய ஸன் கிளாஸ் இங்கே தேவைப்படாது.”

“இது ஸன் கிளாஸ் இல்லை. கோ. கோ. கிளாஸ், அழகுக் கண்ணாடி ஒரு ஃபேஷன்”

‘தங்கச்சி ஒரு டிராமாவே ஆடினதாகக் கேள்விப் பட்டேனே ?” என்றார் அண்ணாச்சி.

“டிராமாவாலேதான் அண்ணன் வழிக்கு வந்தாரு” என்றான் உடனிருந்த மாணவன்.

பாண்டியன் அவளைக் கேட்டான்.

ዘ என்ன ஸ்ப்ஜெக்ட்னு இதிலே வந்து சேர்ந்தீங்க?”

“ஏன்? ரொம்ப நல்ல ஸப்ஜெக்ட்னு ஆசைப்பட்டுத் தான் சேர்ந்திருக்கேன். கல்கத்தாவிலே ரவீந்திர பாரதி சர்வகலாசாலையில் இந்த சப்ஜெக்ட் ரொம்ப நாளா இருக்கு அவ்வளவு தூரம் என்னை அனுப்ப அப்பா வுக்கு மனசு இல்லை. இங்கே சேர்த்திருக்காரு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/24&oldid=609359" இலிருந்து மீள்விக்கப்பட்டது