பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 சத்திய வெள்ளம்

கொண்டிருந்தார்கள். அந்த எஸ்டேட் அதிபருக்குத் தம்முடைய தேயிலைத் தோட்டத்தை ஒட்டி இருந்த ஒரு முந்நூறு ஏக்கர் மலைப்பகுதி சர்க்காரிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு ஜாரி செய்து தரப்பட இருந்ததாகவும், அது அவ்வாறு செய்து தரப்பட வேண்டுமானால் இந்த டாக்டர் பட்டத்தை அளிக்க அவர் முயலவேண்டும் என்று அமைச்சரே பேரம் பேசியதாகவும் தெரிந்தது. எவ் வளவுதான் காதும் காதும் வைத்தாற்போல் காரியங்கள் நடந்தாலும் அவை வெளியே பரவிக் கொண்டுதான் இருந்தன. இரகசியங்கள் வெளியே பரவுவதற்கு வேறு தனிக் காரணங்கள் வேண்டியதில்லை. அவை இரகசி யங்களாயிருப்பதே போதுமானது என்பதுபோல் அவை வெளிப்பட்டுவிட்டன. ஆளும் கட்சிக்கு மிக மிக வேண் டிய அந்த எஸ்டேட் அதிபர் மக்களிடையே நல்ல பேர் இல்லாமல் வெறுக்கப்பட்டவர். பண பலத்தையும் செல் வாக்கையும் வைத்துத் தமக்கு நன்மை செய்யும் ஒரு மந்தி ரியை ‘டாக்டர் ஆக்கிவிட முயன்று கொண்டிருந்தார் அவர். பணமாகவும், பொருளாகவும், லஞ்சம் வாங்கி வாங்கி அலுத்துவிட்ட மந்திரிக்கு டாக்டர் பட்டமே லஞ்சமாகக் கிடைக்கும் என்றதும் அதில் ஒரு நைப்பாசை ஏற்பட்டு வளர்ந்திருந்தது. -

மறுநாள் காலை நல்ல மழையாக இருந்ததனால் பல்கலைக் கழக செனட் ஹாலில் பத்து மணிக்குக் கூட வேண்டிய சிண்டிகேட் கூட்டம் சிறிது தாமதமாகப் பதி னொரு மணிக்குக் கூடியது. துணைவேந்தர் உட்படப் பதி னெட்டு உறுப்பினர்களும் வந்திருந்தார்கள். பதினெட்டுப் பேரில் பதினாறு பேர் துணைவேந்தருக்கும், எஸ்டேட் அதிபருக்கும் இசைந்து விட்டார்கள். டாக்டர் ஹரி கோபால் என்ற பிரபல வைத்திய மேதை ஒருவரும், மிஸஸ் செரியன் என்ற பெண்மணி ஒருத்தியும் துணை வேந் தரையோ எஸ்டேட் அதிபரையோ இலட்சியம் செய்த தாகவே தெரியவில்லை. மிகவும் சுதந்திரமாகவும், தன் மானம் உள்ளவர்களாகவும் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார்கள்