பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 241

விழித்துக் கொண்டார். மேலே பேசுவதையும் நிறுத்தி விட்டார்.

பகல் உணவுக்குப் பின் சிறிது ஒய்வு நேரம் விட்டு மாலை மூன்று மணிக்கு மீண்டும் சிண்டிகேட் கூடியது. தேநீருடன் கூட்டத்தைத் தொடங்கினார் துணைவேந்தர். டாக்டர் ஹரிகோபால், மிஸஸ் செரியன் இருவரைப் பற்றிய பயம் இருந்தாலும் துணைவேந்தர் மீண்டும் ஒரு நீண்ட புகழுரைச் சொற்பொழிவில் இறங்கினார்.

“எல்லா வருஷங்களையும்விட இந்த வருஷம் தம் முடைய பட்டமளிப்பு விழா மிகவும் தாமதமாவதில் ஒரு விசேஷம் இருக்கிறது. நம்முடைய பல்கலைக் கழகம் இலக் கிய மேதையாக விளங்கும் அமைச்சர் கரிய மாணிக்கம் அவர்களுக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க வேண் டும் என்பதை ஆனந்தவேலு முதலிய பதினைந்து சிண்டி கேட் உறுப்பினர்கள் ஆதரித்து யோசனை தெரிவித்திருக் கிறார்கள். அமைச்சரே வந்து மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்றும் நாம் அவரை வேணடப் போகிறோம்.” உடனே ஹரிகோபால் குறுக்கிட்டார்:

“கல்லூரிப் பட்டமே பெறாத ஒருவர் பட்டமளிப்பு விழா கவுனை அணிவதும் மாணவர்களுக்குப் பட்டங் களை அளிக்க அழைக்கப்படுவதும் எப்படி சாத்தியம்?” “அதனால்தான் பட்டமளிப்பு விழாவில் முதலிலேயே நாம் அமைச்சருக்கு டி.லிட். பட்டம் வழங்கிய அவரை மாணவர்களுக்குப் பட்டமளிக்கத் தகுந்தவர் ஆக்கிவிடப் போகிறோம்.”

“ஒகோ! கவுனுக்காகவே ஒரு பட்டமா? பட்ட மளிப்பு விழாவுக்காகப் பல மாணவர்கள் கவுன்தைக்கிற போது தைத்த கவுனு’க்காகவும் ஒரு பட்டத்தைக் கொடுக்கப் போகிறீர்களா?”

“மிஸ்டர் ஹரிகோபால்!. பீ nரியஸ்.” என்று துணை வேந்தர் ஏதோ உரத்த குரலில் தொடங்கவே டாக்டர் ஹரி கோபாலுக்கும் கோபம் வந்துவிட்டது. அவர் கத்தினார்.

ச.வெ-16.