பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 சத்திய வெள்ளம்

“தி ஹானரரி டிகிரீஸ் வீ கன்ஃபெர் ஷாட் பி ஸ்டிரிக்ட்லி பேஸ்டு ஆன் மெரிட். அதர் கன்ஸ்ட ரேஷன்ஸ் ஷாட் நாட் கம் இன்.”

“நீங்கள் அமைச்சரை எதிர்க்கிறீர்கள் போலிருக்கிறது, மிஸ்டர் ஹரிகோபால்!”

“நோ. ஐயாம் நாட் எகெய்ன்ஸ்ட் எனி ஒன். பட் ஐயாம் கன்ஸர்ன்ட் ஒன்லி வித் தி டிக்னிட்டி ஆஃப் திஸ் யூனிவர்ஸி.டி. கமான் டெல் மீ ஒன் குட் ரீஸன். ஒரு ‘டி.லிட் தரவேண்டிய அளவு அவர் என்ன சாதித்தி ருக்கிறார்?”

“இருபது ஆண்டுகளாக மேடைகளில் பேசி வருகிறார்.” -

“எனக்குத் தெரிந்த பலர் நாற்பது ஆண்டுகளாக மேடைகளில் பேசி வருகிறார்கள்.”

“ஒடிப்போன வனிதை, தேடிவந்த செல்வி, பன்னிர்க் குளத்தில் பருவப் பாவை போன்ற கதைகளை எழுதித் தமிழ் எழுத்துலகுக்குத் தளராத தொண்டு புரிந்திருக்கிறார்.”

“அவற்றைவிட அருமையான தமிழ்ப் படைப்பிலக்கி யங்களைப் படைத்துவிட்டு வறுமையில் வாடும் ஒரு டஜன் உயர்ந்த இலக்கிய கர்த்தாக்களாவது தமிழில் இருப்பார்கள்! ஆனால் பாவம், அவர்களில் யாரும் அமைச்சர்களாக முடியவில்லை.”

“இதைத் தடுப்பதன் மூலம் இந்த யுனிவர்ஸிடிக்கு ஏற்பட இருக்கும் பல நன்மைகளையே நீங்கள் தடுக் கிறீர்கள்” என்றார் ஆனந்தவேலு. ஹரிகோபாலின் கோபம் மேலும் அதிகமாயிற்றே ஒழியத் தணியவில்லை. அவர் மேலும் மேலும் ஆத்திரமடைந்து கத்தினார்.

“ஐ திங்க் வீ டோண்ட் கன்ஃபெர் ஸச் டிகிரீஸ் ஃபார் இன்டலக்சுவல் பேங்க்ரப்ட்ஸி. அவர் ஹையஸ்ட் ஹான்ஸ் ஷாட் நாட் கோ சீப்.” х