பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 243

தீர்மானம் ஒட்டுக்கு விடப்பட்டது.

“ஐ ஃபுல்லி எண்டாரஸ் தி வியூ ஆஃப் டாக்டர் ஹரி கோபால்” என்று மிஸஸ் செரியனும் உறுதியாகக் கூறினாள். தீர்மானம் ஒரு மனமாக இல்லாமல் போனாலும் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்ததால் அந்தத் தீர்மானத்தை சான்ஸ்லருக்கோ இணைவேந்தருக்கோ அனுப்பி, அவர் சம்மதத்தோடு பட்டமளிக்கலாம் என்று பல்கலைக்கழக விதிகளில் ஒரு மூலையில் இருந்த விதி விலக்கைப் படித்தார் துணைவேந்தர். டாக்டர் ஹரி கோபால், மிஸஸ் செரியன் இருவரைத் தவிர மற்றவர் களின் ஆதரவோடு அமைச்சர் கரியமாணிக்கத்துக்குக் கெளரவப் பட்டம் வழங்க முடிவாயிற்று. டாக்டர் ஹரி கோபால் பேசிய சில கடுமையான வாக்கியங்கள் ‘மினிட்ஸில் இடம் பெறலாமா கூடாதா என்று ஒரு சர்ச்சை எழுந்தது. எது விடப்பட்டாலும் தாங்கள் இருவரும் அந்தக் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படுவதை எதிர்த்ததுக் கண்டிப்பாக மினிட்ஸில் இடம் பெற வேண்டும் என்று டாக்டர் ஹரிகோபாலும், மிஸஸ் செரியனும் வற்புறுத்திவிட்டு வெளியேறினார்கள்.

எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலு உடனே அமைச் சரை டெலிபோனில் கூப்பிட்டு அந்த நற்செய்தியைத் தெரிவிக்க விரைந்தார். இந்த நற்செய்தியைச் சொல்லித் தமக்கு வேண்டிய காரியத்தை அமைச்சரிடம் முடித்துக் கொள்ள முந்தியது அவர் ஆவல். துணைவேந்தரோ இன் னும் ஒரு மூன்றாண்டோ, ஐந்தாண்டோ, பதவி உறுதிக்கு வழி பிறந்தது என்ற நம்பிக்கையை அடைந்திருந்தார். செய்தி மெல்ல மெல்லப் பல்கலைக் கழக வட்டாரத்தில் பரவத் தொடங்கியது.

சிண்டிகேட் கூட்டத்தில் மினிட்ஸுக்'க்காகக் குறிப் பெடுகிற சுருக்கெழுத்தாளர் கதிரேசனின் உறவினர். அவர் பல்கலைக் கழக நிர்வாக ஊழல்களில் மனம் வெறுத் துப் போனார். மாலை ஐந்து மணி சுமாருக்கு அந்தச் சுருக்கெழுத்தாளரைச் சந்தித்து எல்லா விவரங்களையும்