பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 சத்திய வெள்ளம்

தெரிந்து கொண்ட பின் பாண்டியனைக் காண்பதற்காகக் கதிரேசன், அண்ணாச்சி கடைக்கு விரைந்தான். பாண்டி யன் அப்போது அண்ணாச்சி கடையில் இல்லை. ஆனால் வேறு சில மாணவர்கள் இருந்தார்கள். பாண்டியன் போயி ருக்கும் நண்பன் வீட்டை அண்ணாச்சியிடம் விசாரித்துக் கொண்டு கடையிலிருந்த மற்ற மாணவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு அங்கே தேடிப் போனான் கதிரே சன். நல்ல வேளையாகத் தேடிச் சென்ற இடத்தில் பாண்டியன் இருந்தான்.

“நேற்று ஏதோ பந்தயம் போட்டாயே, பாண்டியன்? முதலில் அந்தப் பந்தயப் பணத்தை எடு. அப்புறம் மற்ற விவரம் எல்லாம் சொல்கிறேன்” என்று தொடங்கினான் கதிரேசன்.

“பந்தயம் எங்கே ஒடிப்போகிறது ? விஷயத்தை முதலில் சொல்லு” என்றான் பாண்டியன். கதிரேசன் சிண்டிகேட் கூட்ட முடிவை விவரித்தான். பாண்டியனும் மற்ற மாணவர்களும் அந்த விவரங்களைக் கேட்டுக் கொதிப்படைந்தனர். பாண்டியன் உடனே சொன்னான்: “ஆண்டுக் கணக்கில் படித்துப் பட்டம் பெற்ற பலர் வேலை கிடைக்காமலும், வாழ வழியின்றியும் தெருவில் திண்டாடுகிறார்கள். படித்தவர்களின் வாழ்வுக்கு வழி சொல்ல முடியாத பல்கலைக் கழகம் சொகுசுக்காகச் சில ருக்குப் பட்டம் வழங்கிக் கொண்டிருக்கிறது. வேடிக்கைதான். எப்படியாவது இதை நாம் எதிர்த்தாக வேண்டும்.”

“எப்படியாவது அல்ல! மிகவும் கடுமையாகவே எதிர்க்க வேண்டும். தகுதி உள்ள ஒருவருக்குத் தகுந்த காரணங்களோடு இந்த யூனிவர்ஸிடி கெளரவ டாக்டர் பட்டம் தந்தால் அதை நாம் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் யாருக்கோ, எந்தக் காரியமோ ஆகவேண்டும் என்பதற்காக இந்த டாக்டர் பட்டம் விலையாக்கப்படுவது தான் எனக்குப் பிடிக்கவில்லை” என்றான் கதிரேசன்.

“எப்படியும் நான் இன்று மதுரைக்குப் புறப்படவி ருக்கிறேன். மணவாளனையும் கலந்து பேசி இதற்கு