பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 சத்திய வெள்ளம்

எதிர்த்துத்தான் நீங்கள் போராடப் போகிறீர்கள்? போன இரண்டு மூன்று வாரங்களாக மேரி தங்கத்தின் தற்கொலை விவகாரத்துக்காக அதற்குக் காரணமான விரிவுரையாளரை நீக்கச் சொல்லிப் போராடினர்கள் ! உங்கள் மேல் நம்ப முடியாத பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி உள்ளே தள்ளினார்கள். அதை எதிர்த்தும் போராடி வென்றாயிற்று. இப்போது பட்டமளிப்பு விழா வருகிறது. அதிலும் நீங்கள் தான் போர்க்கொடி உயர்த்த வேண்டும். தொழிலாளி களையும், மாணவ சமூகத்தையும் தவிர மேல் மட்டத் திலும், நடுத்தரத்திலுமான வெள்ளைக் காலர் சட்டைக் குரிய மக்கள் எப்போதும் எதிலும் கலந்து கொள்ளாத, ஸைலண்ட் மெஜாரிட்டியாகவே ஒதுங்கியிருக்கும் வரை நம் நாட்டுக்கு விடிவு இல்லை. அது வரை நீங்கள் தான் எதற்கும். களப்பலியாகித் தீரவேண்டும் போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் மக்கள் பலியாவதை நான் வெறுக் கிறேன். தீமைகளுக்குக் காரணமானவர்களையே தேடிப் பகிரங்கமாகப் பலியிடும் துணிவு நமக்கு வராதவரை நாம் உருப்படப் போவதில்லை.”

“நீங்கள் சென்ற முறை சந்தித்தபோது எங்களுக்கு மிகமிக உதவியாயிருந்தீர்கள். ஆசிரிய வர்க்கத்தில் கூடச் சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ரொம்பவும் பயந்து சாகிறார்கள். நீங்கள்தான் இந்தத் தலைமுறை ஆசிரியரைப் பிரதிபலிக்கிறீர்கள், சார்! நீங்கள் எனக்குக் கொடுத்த புத்தகங்கள் மிக மிகப் பயனுள்ளவை. அவை என் சிந்தனையைச் சூடேற்றிவிட்டன. உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். வெறும் உபசார வார்த்தை களால் நன்றி சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது என்பதால் நான் தயங்கித் தயங்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது என்று கதிரேசன் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னான். பிச்சை முத்து அவர்களுக்குத் திட்டவட்டமான சில யோசனை களைக் கூறினார். முடிவில் ஒர் எச்சரிக்கையும் செய்தார்:

“இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை நீங்கள் மிகமிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மாணவர் போராட்டம்