பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 247

என்பது படிப்பைத் தட்டிக் கழிக்கும் ஒரு சாதனம் என்றோ, வேறு எதற்கும் லாயக்கில்லாத கழிசடை மாணவர்களின் வேலை என்றோ வெளியே உள்ள தந்தக் கோபுரவாசிகள் சிலர் பேசுகிறாற்போல் உங்களில் யாவரும் ஆகிவிடக்கூடாது. தீவிரவாதிகளாயிருப்பதோடு நீங்கள் எவ்வளவு திறமை சாலிகள் என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும். இல்லா விட்டால் உங்கள் போராட்டங்களை நியாயப்படுத்த முடியாமல் போய்விடும். இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.”

“இந்தக் கருத்தை நான் வரவேற்கிறேன். போராட்டங் களின் அடிப்படை நியாயங்கள் சரியாகவும் திடமாகவும் இருந்தால் அவற்றின் தொடக்கமே வெற்றிதான். முடிந்த பின் வரும் வெற்றியைவிடத் தொடங்கியதுமே கிடைக்கும் தார்மீக வெற்றி பெரிது சார்!” என்றான் பாண்டியன்.

காலை ஐந்து மணிக்கு அவர்கள் நிலக்கோட்டையி லிருந்து புறப்படும்போது, பல்கலைக் கழகம் திறந்ததும் தாமே ஒரு விடுமுறை நாளில் மல்லிகைப் பந்தலுக்கு வந்து மாணவர்களைச் சந்திப்பதாகச் சொல்லி, விடை கொடுத்தார் பிச்சைமுத்து. பாண்டியன் அண்ணாச்சியின் கடை முகவரியை எழுதி அவரிடம் கொடுத்தான். பிச்சை முத்துவுக்கே அண்ணாச்சியைப் பற்றி எல்லா விவரங் களும் நன்கு தெரிந்திருந்தது. “தெரியுமே, இந்த அண்ணாச்சி யைப் பற்றி நான் ரொம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுள்ள சூழ்நிலையில் பல பெரிய வசதியுள்ள மனிதர் கள் முன் வந்து செய்ய அஞ்சும் பொதுக் காரியங்களை ஒவ்வோர் ஊரிலும் இப்படி யாராவது ஒர் ஏழை அண்ணாச்சிதான் செய்து கட்டிக் காக்க வேண்டி யிருக்கிறது” என்றார் அவர்,

விடியற்காலை, ஆறு ஆறரை மணிக்கே அவர்கள் மதுரையை அடைந்துவிட்டார்கள். உடனே வாடகைக் காருக்குக் கணக்குத் தீர்த்துப் பணம் கொடுத்துத் திருப்பி அனுப்பினான் கதிரேசன். அவர்கள் ஐவரும் மணவாளன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது மணவாளன் காலைத்