பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 23

“உங்க நாயினாவுக்கு வாழ்க்கையே இதுதானே அம்மா ?” என்று அண்ணாச்சி கந்தசாமி நாயுடுவைப் பற்றிக் குறிப்பிட்டார்.

“நானும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்” என்றான் பாண்டியன்.

அண்ணாச்சி ஒரே உற்சாகத்தில் இருந்தார். “தம்பீ! அந்தக் காலத்திலே இவங்க நாயினா கம்பெனியிலே சம்பூர்ண மகாபாரத நாடகத்திலே நானு பீமசேனன் வேசம் கட்டியிருக்கேன். அப்ப இந்தக் கண்ணு சின்னப் பாப்பாவா இருந்திச்சு.”

‘கண்ணுக்கினியாள் என்ற முழுப் பெயரை உரிமையோடு கண்ணு’ என்று செல்லமாக அழைத்ததி லிருந்து அண்ணாச்சிக்கு அந்தக் குடும்பத்தின் மேலிருந்த பாசத்தைப் பாண்டியன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவள் அழகோ அவனை நேராகவும் ஒரக் கண்களாலும் திரும்பத் திரும்பப் பார்க்கச் செய்தது.

சிறிது நேரத்தில் அவளும் சக மாணவியும் விடை பெற்றுக் கொண்டு விடுதிக்குப் புறப்பட்டுப் போய்விட் டார்கள். ஹாஸ்டலிலிருந்து வெளியே சென்று திரும்பும் விதிகள் பெண்கள் பிரிவில் மிகவும் கண்டிப்பானவை. அன்று சுதந்திர தினமாகையால் காலை பதினொறு மணிவரை அனுமதி இருக்கும். பத்தே முக்காலுக்கு கண்ணுக் கினியாளும் அவள் தோழியும் புறப்பட்டதற்கு அதுதான் காரணம் என்று பாண்டியன் புரிந்து கொண்டான். அவள் போனதும் அண்ணாச்சியை அவன் கேட்டான்:

“அண்ணாச்சி! இதென்ன உங்க நாயுடு கண்ணுக் கினியாள்’னு ரொம்பப் பழைய காலத்துப் பேரா வச்சிருக்காரே? ஏதோ சரித்திரக் கதையிலே வர்ற மாதிரியில்ல இருக்கு? இந்த நாள் பேராத் தெரியலியே..!” “ஆமாங்க தம்பி! அது நாயினாவோட கிராமத்துக் குலதெய்வமான அம்மன் பேரு நாயினா செல்லமா ‘கண்ணு'ன்னுதான் கூப்பிடுவாரு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/25&oldid=609382" இலிருந்து மீள்விக்கப்பட்டது