பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 249

சிறிய செயற்கைக் குளத்தில் சின்னஞ் சிறு பிளாஸ்டிக் கப்பலை மிதக்க விட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

“கப்பல் கவிழ்ந்துவிடப் போகிறது. கவனம்.” - குரலைக் கேட்டுத் திரும்பியவள் அவனைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.

“வாருங்கள்! புயல் உள்ளே வந்தால் கப்பல் கவிழா மல் பின்னென்ன பிழைக்கவா செய்யும்? நேற்றே வருவதாகச் சொல்லியிருந்தீர்களே? நாலைந்து நாட்கள் கழிந்துவிட்டது என்றாலும் இங்கே வந்ததும் கொலுவை அவசரம் அவசர மாக வைத்துவிட்டேன். எப்படி இருக்கிறது கொலு?”

“உண்மையைச் சொல்லட்டுமா?”

ff . *

ம்ம்... சொல்லுங்களேன்” - இந்த ‘ம்ம் ஒரு சங்கீதமாகவே பாண்டியனின் காதில் ஒலித்தது.

“இந்தக் கொலுவிலேயே மிகவும் அழகான பொம்மை - பெரிய பொம்மை, உயிருள்ள பொம்மை - கொலு வுக்கு வெளியே தரையில் நின்று கொண்டிருக்கிறது.”

அவள் முகம் சிவந்தது. அவனை அப்போதுதான் முதல் முறை சந்திப்பதுபோல் மிகவும் புதிதாக ஒரக் கண்களால் பார்க்கத் தொடங்கினாள் அவள்.

இருபதாவது அத்தியாயம்

கொலுப் பொம்மைகளுக்கு முன்னால் உயிருள்ள இரண்டு பதுமைகள் போல் பாண்டியனும் அவளும் ஒரு வரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றஅந்த மெளனத்தை வாசலில் வந்து குரல் கொடுத்த தந்தி போஸ்ட்மேன்தான் கலைத்தான். தந்தியை வாங்கச் சென்ற கண்ணுக்கினியாள் சிரித்துக்கொண்டே திரும்பி வந்தாள்.

“இப்போதெல்லாம் தந்திகள் கடிதங்களைவிடத் தாமதமாகவும், அவசரத் தந்திகள் புக்-போஸ்ட்களை விடத் தாமதமாகவுமே கிடைக்கின்றன."