பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 சத்திய வெள்ளம்

“ஏன்? நான் நேற்றுக் கொடுத்த தந்தியே இப்போது தான் வருகிறதா?”

“இப்போதாவது வந்திருக்கிறதே?”

“புறப்பட்டு வருவதாகச் செய்தி அறிவித்துக் கொடுக் கப்படும் பெரும்பாலான தந்திகளை அவற்றைக் கொடுத் தவர்களே புறப்பட்டு வந்து சேர்ந்தபின் தங்கள் கைகளாலேயேதான் வாங்க வேண்டும் போலிருக்கிறது.”

தபால் தந்தி இலாகாவின் திறமைகளைப் பத்து நிமிஷம் விமர்சனம் செய்து இருவரும் இரசிக்க முடிந்தது. நாயுடு எங்கேயோ வெளியில் போயிருந்தார். உள்ளே இருந்து தன் தாயைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து அந்த அம்மாளுக்குப் பாண்டியனையும், பாண்டியனுக்கு அந்த அம்மாளையும் அறிமுகப்படுத்தி வைத்தாள் கண்ணுக் கினியாள். அறிமுகம் என்ற நாகரிகச் சடங்கிற்கே கூசினாற் போல் சிறிது வெட்கமும் கூச்சமும் கலந்த மலர்ச்சியையும், வரவேற்பையுமே அந்தப் பழுத்த சுமங்கலியின் முகத்தில் காண முடிந்தது. இன்னொருவர் எடுத்துச் சொல்லும் முகமன் வார்த்தைகள், அறிமுகங்கள் எல்லாம் பழைய தலைமுறை மனிதர்களுக்குத் தேவையே இல்லை. அறிமுக மும் பரிச்சயமும் இல்லாமலேயே மனிதர்களிடம் பழகவும் பேசவும் அவர்களால் முடியும். நாகரிகத்தின் போர்வைகள் எதுவும் அவர்களை மறைக்கமுடியாது. கண்ணுக்கினியாளின் தாய் நாச்சியாரம்மாள், மகள் பாதி அறிமுகத்தைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, முதலில் இருந்த வெட்கமும் கூச்சமும் நீங்கி,

“இவ்ளோட நாயினா சொல்லியிருக்காரு. தம்பியை உட்காரச் சொல்லும்மா. காப்பி எதினாச்சும் கொடு ! உங்க நாயினாவும் இப்ப வந்திடுவாங்க” என்று சுபாவமாக ஏற்கெனவே அறிமுகமான ஒருத்தரிடம் பேசுவது போல் பாண்டியனிடம் பேசத் தொடங்கிவிட்டாள்.

பாண்டியனுக்குக் கொடுப்பதற்காகச் சிற்றுண்டியை எடுத்துவர உள்ளே சென்றாள் கண்ணுக்கினியாள். நாற்காலி யில் உட்கார்ந்துவிட்ட பாண்டியனைப் பார்த்து, நிலைப்