பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 சத்திய வெள்ளம்

விவரங்களைவிட உன் அம்மாவின் புள்ளி விவரங்கள் தெளிவாகவும் புரியும் படியாகவும் இருக்கு. நாளாக நாளாக எதிர்க் கட்சிகளுக்கு எதை எதிர்க்க வேண்டும் என்பதுகூட மறந்து போயிடுது. தீப்பற்றி எரியறாப்பலே விலைவாசிகளின் கொடுமை பத்தி எரியுது. அதை யாரும் கவனிக்க மாட்டேங்கறாங்க.”

“அதில்லே, தம்பீ! ஒவ்வொரு கட்சித் தலைவருங் களும் ஒரு மாசமாவது மளிகைக் கடைக்குப் போயி அவங்கவங்க வீட்டுப் பாட்டுக்குப் பலசரக்குச் சாமான் வாங்கிப் போடறதுன்னு வச்சிக்கிட்டா எதை எதிர்க் கணும்கிற ஞானம் அவங்களுக்கு அந்தக் கடை வாசல் லியே கிடைச்சிடும்.”

“தப்பா நினைச்சுக்காதீங்க. அம்மாவுக்கு எல்லாரிட மும் பேச முடிந்த ‘காமன் ஸ்ப்ஜெக்டே இதுதான்! இதைக் கேட்கப் பயந்துக்கிட்டுத்தான் நாயினா முக்கால் வாசி நேரம் வெளியிலே போயிடறாரு பக்கத்திலே கோயிலுக் குள்ளே தெற்கு ஆடிவீதியிலே திருப்புகழ்ச் சங்கம்னு ஒண்ணு இருக்கு. அதிலே நாயினாவோட பழைய நாடகக் கம்பெனிக் காலத்து சிநேகிதர் ஒருத்தரு இருக்காரு. நாயினா அங்கே போயிடுவாரு...”

“அதாவது உங்க வீட்டிலேயே ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி ரெண்டும் இருக்குன்னு சொல்லு! இதிலே நீ எந்தப் பக்கம்? எது பவர்ஃபுல்?”

“நான் எப்பவுமே அம்மா கட்சிதான். அதுதான் எதிர்க்கட்சி. அதுதான் பவர்ஃபுல்! அப்பா கட்சி ஆளும் கட்சி. குற்றச்சாட்டுக்களைக் காதில் போட்டுக் கொள்ளா மலே மெல்ல நழுவித் திருப்புகழ்ச் சங்கத்துக்குத் தப்பி ஓடி விடுவார் நாயினா...”

“பாவம்! அருணகிரிநாதர் திருப்புகழை இதற்காக எழுதியிருக்கமாட்டார்.”

இந்தச் சமயத்தில் கையில் ஒரு குடையும் மற்றொரு கையில் தடிமனான திப்புகழ்ப் புத்தகமுமாகக் கந்தசாமி