பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 255

சுருட்டி வைக்கப்பட்ட nன்கள், ஜிகினா, கண்ணாடிக் கல் பதித்த கிரீடங்கள், தங்கநிறத் தாள் ஒட்டிய கதாயுதம், திரிசூலம், வேல், வாள், பிளைவுட் பலகையில் வண்ணம் எழுதிய கதவு-பிளைவுட்டில் ஜன்னல் போல் வரைந்த நாடக மேடை வீட்டின் பகுதிகள், பூங்காக் காட்சி எல்லாம் தூசிபடிந்திருந்தன. பச்சை, சிவப்பு, நீலம் என்று கண்ணாடித் தாள் ஒட்டிய டிராமா லைட்டுகள், மைக், ஒலி பெருக்கி, நாடக உடைகள் எல்லாம் கதவில்லாத மர அலமாரிகளில் காட்சி அளித்தன. “அதோ, அந்த அலமாரி யிலே கிடக்குதே அந்தக் கதாயுதத்தைத் தூக்கிக்கிட்டுத் தான் உங்க அண்ணாச்சி பீமசேனன் வேசத்திலே மேடை யேறி அட்டகாசம் பண்ணிக்கிட்டிருந்தாரு. இப்ப கோபால்னு சினிமாவிலே ஹீராவா ஜொலிக்கிறானே, அவன் நம்ம கம்பெனியிலே ஸ்திரிபார்ட் கட்டிக்கிட்டு இருந்தவன்தான். முத்துக்குமார்னு வசன கர்த்தாவா போடுபோடுன்னு வெளுத்து வாங்கிக் கிட்டிருக்கானே அவனும் இங்கே இருந்தவன்தான்.”

“இவ்வளவு சாதனங்களையும் வச்சிக்கிட்டு ஏன் கம்பெனியை மூடிட்டீங்க?”

பாண்டியனின் இந்தக் கேள்விக்கு உடனே மறுமொழி கூறாமல் தயங்கினார் நாயுடு. அவர் முகம் இருண்டது. சுற்றி இருந்த எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நெஞ்சு விம்மித் தணியப் பெருமூச்சுவிட்டார். அப்புறம் சொன்னார்: “இந்தக் கலை இன்னிக்கி வாழைமரம் போல ஆயிடிச்சு குலை தள்ளி அந்தக் குலையிலே தார் முற்றிக் காய்கள் பக்குவப்பட்டதும் தாரை வெட்டி நல்ல விலைக்கு வித்துப் பிட்டு, அப்பாலே தாய் வாழையை அழிச்சிடுவாங்க. “சினிமாங்கற குலை தள்ளித் தார் முற்றியதும் அது நல்ல விலையாகி விற்குது. ஆனால் அந்தத் தாரை ஈன்ற தாய் வாழையாட்டம் நாடகக்கலை அழியுது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக் காலம் நாடகத்தாலே வாழ்ந்த நான் இப்ப சிவராத்தி, வைகுண்ட ஏகாதசி நாடகங்களுக்கும், ஸ்கூல் கள், ரெக்ரியேஷன் கிளப்புகளின் நாடகங்களுக்கும் இந்த