பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 சத்திய வெள்ளம்

சீன், ஸ்ெட், கிரீடம், டிரஸ், லைட்டு, மைக் இதையெல் லாம் அப்பப்போ வாடகைக்கு விட்டுக்கிட்டிருக்கேன் தம்பி! இதைத் தவிர மேலுர் ரோட்டிலே ஒத்தக் கடையிலே முல்லைக்கால் பாசனத்திலே கொஞ்சம் நிலபுலன் இருக்கு. தெற்கு மாசி வீதியிலே ஒரு சின்ன வீடும் உண்டு. அதைப் பொடவைங்களுக்குச் சாயம் காய்ச்சற பட்டு நூல் காரரு ஒருத்தருக்கு வாடகைக்கு விட்டிருக்கேன். இதெல்லாம் இல்லாட்டி, கம்பெனி நடக்கிற காலத்திலே சிக்கனமாக இருந்து இப்பிடிக் கொஞ்சம் சேர்த்திருக்காம விட்டிருந்தேனின்னா, இன்னிக்கு நானே தெருவில் தான் நிக்கனும், ஏதோ அந்த அனுமாரு கிருபையிலே நான் தெருவில நிக்கலே, என்னை நம்பினவங்களையும் தெருவிலே நிக்கறாப்பல யாரையும் விடலே.”

“உங்க பொண்ணுக்கு உங்க கம்பெனி நாடகங்களிலே நடிச்சுப் பழக்கம் உண்டா? சமீபத்திலே யூனிவர்ஸிடியிலே பாஞ்சாலி சபதத்துலே பிரமாதமா நடிச்சுது.”

“சின்னப் பொண்ணா இருந்தப்ப பால மீனாட்சி, பால லோகிதாசன், பாலகிருஷ்ணன், பாலமுருகன்னு அந்த வயசுக்கு ஏத்தாப்ல ஏதோ சிலதுலே நடிச்சிருக்கு. பத்து வயசுக்கப்புறம் நானே அதை நடிக்க விடலே. படிப்பிலே கவனம் கெட்டுப் போயிடுமோன்னு எனக்கே ஒரு பயம் வந்திடிச்சி. தவிர இந்த லயன்லே வந்தாலே நடத்தை பிசகிப் போயிடுமோன்னு ஒரு பயமும் அப்ப எனக்கு இருந்திச்சு. கடைசியிலே இத்தனை கவனத்தையும் மீறி இதிலேயே டிப்ளமா வாங்கணும்னு கல்கத்தா போயி ரவீந்திர பாரதி யூனிவர்ஸிடியிலே சேரக் கிளம்பிடிச்சு அது. நல்லவேளையா மல்லிகைப் பந்தல்லேயும் அந்த ‘டிப்ளமா இருந்ததாலே அங்கேயே கொண்டாந்து சேர்ந்தாச்சு...”

“இது பரவாயில்லை. ஒண்ணைத் தொழிலா நடத் தறதுக்கும் ஒரு ‘சயின்ஸா படிக்கிறதுக்கும் நல்ல வித்தி யாசங்கள் இருக்கும். உங்கள் பெண்ணுக்கும் இதிலே நல்ல டேஸ்ட் இருக்கிறதாகத் தெரியுது.” -