பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 257

“டேஸ்ட் இருந்து என்ன தம்பி, பண்ணப் போறோம் இனிமே? அவ என்ன தன்னிந்தனியா ட்ரூப்’ வச்சு நாடகமா நடத்தப் போறா?”

“நட்த்த முடியாதுன்னு இப்பவே நீங்க எப்படிச் சொல்லிட முடியும்? மலையாளத்திலேயும், வங்காளத் திலேயும் கதை, நாவல், கவிதை, இலக்கியம் எல்லாம் இந்தக் காலத்தினாலே பாதிக்கப்பட்டு இக்கால நவீன மாறுதல் களையும், யதார்த்தத் தன்மைகளையும் அடைந்திருக்கிற மாதிரி நாடகமும் மாறுதல் அடைந்து வளர்ந்திருக்கு. தமிழ் நாடகமும் அப்படி ஆகணும்னா இந்த டிப்ளமா வாங்கறவங்க முன் வந்து அதற்கு முயற்சி செய்துதான் ஆகணும்.” -

“எனக்கு இதிலே அவ்வளவு நம்பிக்கை எல்லாம் இல்லே. தம்பீ! ‘அது'னோட முகம் கோணறாப்பல மறுத் துப் பேசிப் பழக்கப்படாதவன் நான். ஒத்தைக்கு ஒரே பொண்ணு. இதைத்தான் படிப்பேனின்னி ஒத்தக் கால்லே நின்னுது. சரிதான்னிட்டேன். ‘டிப்ளமா வாங்கி அதை வச்சு நாடகக் கலையை பெரட்டிப்பிடலாம்னு நான் நம்பலை.”

கடந்தகால அனுபவங்களால் அவருக்கு இருந்த கசப்பே இந்த மறுமொழியில் தெரிந்தது. சில விநாடிகளில் அவரே பேச்சை வேறு திசைக்கு மாற்றினார்.

“உங்க ஊருக்கும் மதுரை வந்துதான் போவணும்னு அண்ணைக்கு மல்லிகைப் பந்தல்லே அண்ணாச்சி கடை யிலே பேசிக்கிட்டிருந்தப்ப நீ சொன்னியே தம்பீ; உங்க ஊரு எந்த ஊருன்னே இன்னம் சொல்லலியே..!”

“பாலவநத்தம். அருப்புக் கோட்டைக்குப் பக்கத்திலே இருக்கு.”

“தெரியும், தம்பீ! பாண்டித்துரைத் தேவரு ஊராச்சே அது..? எங்க மதுரையிலே நாலாவது தமிழ்ச் சங்கத்தை வச்ச புண்ணயவானோட ஊர்க்காரன் நீ. இல்லியா?”

அப்புறம் சிறிது நேரம் அவனுடைய பெற்றோர், தொழில், சொத்து, சுகம் பற்றிச் சுற்றி வளைத்து பழைய

ச.வெ.-17