பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 259

“அது ஏன் அந்தக் கீர்த்தனையைத் தேர்ந்தெடுத்துப் பாடினே ? வேணும்னே குறும்புதானே?”

“அதுதான் குறும்புன்னு புரிஞ்சிருக்கே? அப்புறம் ஏன் கேட்கிறீங்க?”

சிரித்தபடி விடை கொடுத்தாள் அவள். மனம் கொள் ளாமல் குறுகுறுக்கும் மகிழ்ச்சியோடு பெருமிதமாகத் துள் ளிப் பாய்ந்து நடந்து சென்றான் பாண்டியன். மேலக் கோபுர வாசல் வழியே போகும்போது கல்விக் கூடங்களுக் கான ஸ்போர்ட்ஸ் சாமான்கள் விற்கும் ஒரு பெரிய கடை அருகே கதிரேசன் யாருடனோ நின்று பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்ததும் பாண்டியனின் நடை தயங்கியது. “வா பாண்டியன்! உலகம் ரொம்ப சிறியதுங்கறதை நம்ம பிச்சைமுத்து சார் நிரூபிக்கிறார். காலையிலேதான் நிலக் கோட்டையிலே இவர்கிட்ட சொல்லிக் கிட்டுப் புறப் பட்டோம். மறுபடியும் இன்னிக்குச் சாயங்காலமே இவரை இங்கே எதிர்பாராமச் சந்திக்கும்படி ஆயிடிச்சு. மாணவர் கள் எல்லோரும் வந்து அங்கே மணவாளன் வீட்டிலே காத்துக்கிட்டிருக்காங்க. உன்னைக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லி மணவாளன் என்னை அனுப்பிச்சாரு நடுவழி யிலே சாரைப் பார்த்தேன். பேசிக்கிட்டிருந்தோம். நல்ல வேளையா நீயே வந்திட்டே.” என்றான் கதிரேசன். தாம் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்துக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கத் திடீரென்று தலைமை ஆசிரியரோ புறப்பட்டு வர நேர்ந்ததாகப் பிச்சை முத்து கூறினார். அத் தோடு அமைச்சர் கரியமாணிக்கத்துக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிற செய்தியை முதல் நாளிரவு அவர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தது தவிர காலையில் பத்திரிகையில் பார்த்ததாகவும் கூறி வருத்தப்பட்டார்.

“நாங்கள் அதைச் சும்மா விடப்போவதில்லை. எப்படி யும் எதிர்த்துப் போராடப் போகிறோம். அதற்காகத்தான் இன்று இங்கே உள்ள வேறு கல்லூரி மாணவர்கள் தலை வர்களையும் சந்திக்கிறோம். இந்தச் சந்திப்பில் ஒரு போராட்டத் திட்டம் உருவாகும்” என்றான் பாண்டியன்.