பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 சத்திய வெள்ளம்

“ஒரு குறையா, இரண்டு குறையா? ஆயிரம் குறை களும் ஊழல்களும் அவற்றை எதிர்த்துப் போராட யாருமின்றி இங்கே இன்று இந்த நாட்டில் கொழுத்துப் போயிருக்கின்றன. உங்கள் போராட்டம் எப்போதும் ஒயவே வழியில்லை. ஒயவும் கூடாது.”

பிச்சைமுத்து அமைதியான சுபாவமுள்ளவரைப் போலத் தோன்றினாலும் அவருடைய உள்ளார்ந்த சிந்தனைகள் மிகவும் தீவிரமாயிருந்தன. மாணவர்களின் படிப்பைப் பற்றி அக்கறை காட்டிப் பேசும்போது அவ்ர் ஆசிரியர் பிச்சைமுத்துவாகத் தோன்றினார். சமூகப் புரட்சிகளையும், போராட்டங்களையும் பற்றிப் பேசும் போது அவர் தீவிரவாதி பிச்சைமுத்துவாகத் தோன்றினார். மாணவர்கள் முதல் முதலாக நிலக்கோட்டையில் அவரைச் சந்தித்த போது புரிந்து கொண்டதைவிட இப்போது அதிகமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. “மாற்றங்களை எல்லாம் சாத்வீக முறையில் கொண்டுவர ஆசைப்படுகிறவர்"- என்றுதான் முதற்பார்வையில் கதிரேசன் அவரைப் பற்றி நினைத் திருந்தான். உண்மையில் அப்படியில்லை. அவர் தீவிரவாதி என்பது போகப்போக விளங்கிற்று. பார்த்துக் கொண்டி ருந்த ஆசிரியர் உத்தியோகத்திற்காகத் தம்மோடு பழகு கிறவர்களிடம் தம்மைத் தெளிவாக இனங்காட்டிக் கொள்ளா மல் பழகும் திறனை ஒரளவு பிச்சைமுத்துவே கடைப் பிடித்து நடிக்கிறாரோ என்று கூடத் தோன்றியது. ஆனாலும் கதிரேசனுக்கு அவர் மேல் ஏற்பட்டிருந்த மதிப்பு ஒரு சிறிதும் குறையவில்லை. நான் ஒரு தீவிரவாதி. புரட்சியில் விருப்பமுள்ளவர்கள் என் பின்னால் அணி வகுத்து வாருங்கள் என்று தன்னை ஒருவர் வெளிப்படை யாக இனங்காட்டிக் கொண்டு வந்து முன்னால் நிற்பதற்கு இன்று இந்தச் சமூகம் ஏற்றதாக இல்லை. அப்படி ஒரு பக்குவமும் தெளிவும் சமூகத்திற்கு வருகிறவரை இலட்சிய வாதிகளும்கூடத் தந்திரமாகத்தான் இருக்க வேண்டும். வேறு வழி இல்லை - என்று கதிரேசனே எண்ணியதனால் அவன் பிச்சைமுத்துவின் நிலையைத் தவறாக எண்ண