பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 - - சத்திய வெள்ளம்

“அவரையும் இங்கே கூப்பிட்டுக்கொண்டு வந்திருக் கலாமே?” என்று மணவாளன் பிச்சைமுத்து அவர்களோடு வராததற்காக வருத்தப்பட்டார். தலைமை ஆசிரியருடன் வந்திருக்கும் அவருடைய வேலை நிர்ப்பந்தங்களைக் கதிரேசன் மணவாளனிடம் சொன்னான். பட்டமளிப்பு விழாவின்போது மந்திரிக்கு டாக்டர் ப்டடம் அளிப்பதை எப்படி எதிரப்பது - எந்தெந்த முறைகளில் மறுப்புத் தெரி விப்பது போன்ற முடிவுகள் அப்போது அங்கு கூடியிருந்த மாணவர்களிடையே எடுக்கப்பட்டன. போராட்ட அறி விப்புக்காக எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களை நகல் எழுதிப் படித்து யாவரும் அங்கீகரித்து அச்சிடக்கூட முடிவு செய்தாயிற்று. இரவு பதினோரு மணி சுமாருக்கு அங்கே கூடியிருந்த உள்ளுர் மாணவர்கள் கலைந்தார்கள். பாண்டியனும் கதிரேசனும் மல்லிகைப் பந்தலிலிருந்து வந்திருந்த மற்ற மாணவர்களும் இரவில் மணவாளனோடு அவர் வீட்டிலே தங்கிக் கொண்டார்கள். இரவு நெடுநேரம் அவர்கள் படுத்தபடியே மாணவர்கள் தொடர்புடைய பல பிரச்னைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு ஒய்ந்து அவர்கள் தூங்கத் தொடங்கிய போது இரண்டா வது காட்சி சினிமா விடுகிற நேரம் ஆகிவிட்டது. அதற்கு மேலும் பேசிக்கொண்டே இருந்தால் அந்தப் பேச்சுக்கு ஒரு முடிவே இல்லை என்று தங்களைத் தாங்களே கட்டுப் படுத்திக் கொண்டுதான் துரங்கினார்கள் அவர்கள்.

மறுநாள் அதிகாலை நாலு மணிக்கு மணவாளனை எழுப்பிச் சொல்லிக்கொண்டு பாண்டியனும் கதிரேசனும் மற்ற மாணவர்களும் பஸ் நிலையத்துக்கு வந்தார்கள். கதிரேசன் முதலியவர்கள் மல்லிகைப் பந்தலுக்கும் பாண்டியன் பாலவநத்தத்துக்கும் பஸ் ஏறினார்கள்.

மல்லிகைப் பந்தலில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை அண்ணாச்சியையும், மற்ற மாணவர்களையும் கலந்து பேசிச் செய்யும்படி கதிரேசனிடமும் பிறரிடமும் கூறி அனுப்பினான் பாண்டியன். மல்லிகைப் பந்தலுக்குப் போகிற பஸ்தான் முதலில் புறப்பட்டுப் போயிற்று. தான்