பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 263

ஊருக்கு விருதுநகர் பஸ்ஸில் போகலாமா, அருப்புக் கோட்டை பஸ்ஸில் போகலாமா என்று யோசித்தான் பாண்டியன். முதலில் அருப்புக் கோட்டை பஸ்ஸே இருந் தது. அந்த அருப்புக்கோட்டை பஸ் காலை நாலே முக் காலுக்குத்தான் புறப்பட்டது. மதுரை நகர எல்லையைக் கடந்து பஸ் அவனியாபுரம் போகும்போது கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது. மேற்குப் பக்கம் அவனியா புரம் கண்மாய்க்கு அப்பால் இருள் புலர்ந்தும் புலராமலு மிருந்த வைகறைக்கு ஏற்ப மங்கலாகத் திருப்பரங்குன்றும், பசுமலையும் தென்பட்டன. விமான நிலையத்துக்கு வழி பிரிகிற இடம் வந்ததும் கட்டிடங்களே அதிகமில்லாத அந்த மேட்டு வெளியிலிருந்து பார்க்கும்போது சூரியோ தயத்துக்கு வரவு கூறிக் குங்குமத்தால் அவசரம் அவசர மாக இட்ட கோலம்போல் கீழவானம் மெல்ல மெல்லச் சிவக்கத் தொடங்கியிருந்தது. ஒடுகிற பஸ்ஸில் முகத்தில் சில்லென்று வந்து உராயும் குளிர்ந்த காற்றையும் பொருட் படத்தாமல் இந்தக் காட்சியை இரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் பாண்டியன். மல்லிகைப் பந்தலில் சூரியோதயத்தை இவ்வளவு அதிகாலையில் பார்க்க முடியாது. காலை எட்டு மணிக்கு மேலானாலும் விடிந்து விட்ட உணர்வுகூட ஏற்படாத ஊர் மல்லிகைப் பந்தல், மல்லிகைப் பந்தலின் நினைவும், பல்கலைக் கழக நினைவு களும், அந்த ஆண்டின் புதிய அநுபவங்களான மாணவர் இயக்க எண்ணங்களும் ஞாபகம் வந்தவுடன் கண்ணுக் கினியாளும் ஞாபகத்தில் வந்து தங்கினாள். அவளைச் சந்திக்க நேர்ந்த முதல் சந்திப்பிலிருந்து முந்திய நாள் மதுரையில் சித்திரக்காரத் தெருவில் அவள் வீட்டில் விருந்து உண்டது வரை ஒவ்வோர் அணுவையும் நினை வில் அசை போட்டு மகிழ்ந்தான் அவன். பஸ் அருப்புக் கோட்டையை நெருங்குமுன் ஒரிடம் வந்ததும் அவன் நினைவு ஒரு பழைய நிகழ்ச்சியைத் திரும்ப எண்ணியது. சாலையில் அப்போது போய்க் கொண்டிருந்த இடத்தில் தான் 1965ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது மேல் வகுப்பு மாணவர்களும்