பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 265

மறுமொழியையும் நினைத்துக் கொண்டான் அவன். இந்த உண்மை ஒருவேளை கந்தசாமி நாயுடுவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடுமோ என்ற கூச்சம் அவனுக்கு அப்போது இருந்தது. ஆனால் அடுத்த கணமே, “கலப்பு மணத்துலே தப்பு ஒண்னும் இல்லே. ஒரு வகையிலே பார்க்கப் போனா நானும் என் சம்சாரமும்கூடக் கலப்பு மணம்னுதான் சொல்லணும். நாங்க கவரை நாயுடு. அவள் கம்மவாரு. தெரிஞ்சிதான் கட்டிக்கிட்ட்ோம்” என்று சுபாவமாக மறுமொழி கூறியிருந்தார் நாயுடு. அதோடு விடாமல் மேலும் அவரே கேட்டார்: “உன்னோட முழுப் பேரு ‘சுபாஷ் சந்திர பாண்டியன்னுல்ல கண்ணு சொல்லிச்சு...!” “அதுவா? எங்கப்பா நேதாஜி பக்தர். முத்துராமலிங் கத் தேவர் மேலே ரொம்பப் பிரியம். அந்தப் பிரியத்திலே வெறும் பாண்டியன்னு கூப்பிடாமே பிரியமா சுபாஷ் சந்திர பாண்டியன்னு கூப்பிடுவாரு” என்று விளக்கியி ருந்தான் அவன். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் இன்னும் ஆயிரம் சீர்திருத்தத் தலைவர்கள் தோன்றினா லும் தமிழ் நாட்டில் சாதிகளைப் பற்றியும், குல முறைகள் பற்றியும் அறிகிற ஆவல் போகாது போல் தோன்றியது பாண்டியனுக்கு அருப்புக்கோட்டையில் இறங்கிப் பாலவ நத்ததுக்கு வேறு பஸ் மாறி ஏறிக் கொண்ட பின்னும் அவன் சிந்தனைகள் தொடர்ந்தன. மனம் முந்திய தினத்து நினைவுகளால் நிரம்பி வழிந்தது.

முதல் நாள் நடந்த இந்த நிகழ்ச்சிகளை மீண்டும் மீண் டும் நினைத்து அவன் சிந்தித்துக் கொண்டிருந்த போகே பஸ் பாலவநத்தத்தில் போய் நின்று இறங்க வேண்டிய நேரம் வந்திருந்தது.

“யாருப்பா சுப்பையாத் தேவரு மகன்தானே? இதென் னப்பா புது நாவரிகம் நெத்தியே தெரியாம கிராப் வாரியிருக்கே..?” என்று மேலே சட்டை போடாமல் திறந்த மார்புடன்கூடிய முதியவர் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறங்கும் போதே அவனை விசாரித்தார். அவர் தோளில் மண்வெட்டி இருந்தது. நின்று அவருக்குப் பதில் சொல்லிவிட்டு