பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 சத்திய வெள்ளம்

அப்புறம் வீட்டுக்கு நடந்தான் அவன் தெருவிலும் பலருக்கு நின்று நின்று பதில் சொல்ல வேண்டியிருந்தது. நடுவழியில் உயர்நிலைப் பள்ளியில் அவனோடு சேர்ந்து படித்த மாணவ நண்பன் ஒருவன் எதிர்ப்பட்டான். இப்போது அவன் விருதுநகர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் பழைய திராவிட நாடு’ இதழ்கள் அடங்கிய பழுப்பேறின பைண்டு வால்யூம் ஒன்று இருந்தது. அந்தத் தடித்த வால்யூமின் மேலட்டை யில் கறுப்பு சிவப்பு நிறம் மேலும் கீழுமாகக் கலந்த எழுத்துக்களில் ‘திராவிட நாடு தொகுப்பு ஒன்று என்றும் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. பாண்டியன் அவனை விசாரித்தான். குரலில் கேலி இருந்தது: “என்ன அழக முத்து? பழசெல்லாம் ஒண்னு விடாமத் தேடித் தேடிப் படிக்கிறாப்பிலே இருக்கு?”

“ஆமாம்! இல்லாட்டி உன்னைப் போலத் தமிழ் எதிர்ப்பு அணியிலே சேர்ந்திடுவேனா என்ன? வடவர் ஆதிக்க வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிடச் செங்குருதி பெருக்கும் பைந்தமிழர் படையின் முதல் போர் முரசு இது! மறந்து விடாதே.” என்று அழகமுத்து பதிலை ஆரம் பிக்கவே பாண்டியன் அடக்கமுடியாமல் சிரித்துவிட்டான். அழகமுத்து இன்னும் கடந்த காலத்திலேயே இருப்பது புரிந்தது. “இந்தா பாரு. பஸ்லேருந்து இறங்கினதும் இறங் காததுமா, ஒரு பிரசங்கம் கேட்க எனக்கு நேரமில்லே அழக முத்து! அர்த்தமுள்ளதா ஏதாவது இருந்தால் சொல்லு” என்று கூறி அழகமுத்துவிடம் இருந்து தப்பினான் பாண்டியன். அமைச்சர் கரியமாணிக்கத்துக்குக் கெளரவ டாக்டர் பட்டம் தருவது பற்றிய செய்தியைத் தினசரிகளில் படித்த்தாகவும் அதைத் தானும் தன்னைச் சேர்ந்த மாணவர்களும் வரவேற்பதாகவும் அழகமுத்து போகிற போக்கில் பாண்டி யனின் காதில் விழும்படி உரத்துக் கூறினான். அவன் தன்னை வம்புக்கு இழுப்பது பாண்டியனுக்குப் புரிந்தது.

பாண்டியன் போய்ச் சேர்ந்தபோது வீட்டில் யாரு மில்லை. பின்னால் மாட்டுக் கொட்டத்தில் வீட்டு வேலை யாள் அய்யாவு பருத்தி விதை ஆட்டிக்கொண்டிருந்தான்.