பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 267

“வா தம்பி! ஐயா, அம்மா, தங்கச்சி எல்லாரும் வெள் ளெனவே எந்திரிச்சி மொளவாத் தோட்டத்துக்குப் போயிட்டாங்க. இன்னிக்கி மொளவா பறிக்கிறாங்க. பொழுது சாயறத்துக்கு முன்னேதான் வருவாங்க. நீ வர்றதா கடிதாசி கிடிதாசி எதுவும் போடலியா?” என்று வரவேற்றான் அய்யாவு.

பையைக் கூடத்துத் திண்ணையில் வைத்துவிட்டுக் கிணற்றடிக்குப் போய்த் தண்ணீர் இறைத்து முகம் கழுவிய பின் பல் விளக்குவதற்காக வேப்பங் குச்சி ஒடித்துக் கொண்டு வந்த பாண்டியன், தலையில் முண்டாசும், முழங்காலுக்கு மேலே தூக்கிக் கட்டிய வேட்டியுமாகக் கிழக்குப் பக்கத்து வீட்டுக்காரரான சன்னாசித் தேவரை எதிர் கொள்ள நேர்ந்தது. அந்தக் கிணறு கிழக்கு வீட்டுக்கும் பாண்டியனின் வீட்டுக்கும் பொதுக் கிணறு. சன்னாசித் தேவர் கிணற்றடிக்குக் குளிக்க வந்திருந்தார். அவரை அன்போடு நலம் விசாரித்தான் பாண்டியன்.

“ஏன் தம்பி! அங்கே யூனிவர்ஸிடியிலே அத்தினி கலாட்டாவுக்கும் நீதான் காரணம்னு பேசிக்கிறாங்களே..? ஒழுங்கா லட்சணமாப் படிப்பைக் கவனிப்பீங்களா, அதை விட்டுப்பிட்டு விடிஞ்சு எந்திரிச்சா போராட்டம் கீராட் டம்னு ஏன் அலையனும்? தேவமாருலே இப்பத்தான் ஏதோ நாலுபேரு வக்கீல், டாக்டரு, அது, இதுன்னு படிச்சு முன்னுக்கு வந்துக்கிட்டிருக்கோம். அது பொறுக்கலியா உனக்கு?” என்று ஆரம்பித்தார். சன்னாசித் தேவர். சன்னா சித் தேவர் ஃபார்வர்ட் பிளாக் பிரமுகர். அப்பாவுக்கு நண்பர். அவருடைய மனநிலையைப் பாண்டியன் அறிவான். பக்கத்துக்கு வீட்டுக் காரரை விரோதித்துக் கொண்டு விவாதிப்பதிலிருந்து பல் துலக்குகிற காரியம் அவனை வசதியாகத் தப்புவித்தது. அவள் பல் துலக்கி முடித்தபோது சன்னாசித் தேவர் குளிக்கத் தொடங்கியிருந்தார். அவரிடம் கையசைத்துக் குறிப்பினாலேயே சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் வந்தான் பாண்டியன். சமையல் அறையில் கம்பங்களி இருந்தது. மடக்கில் தயிரை ஊற்றிக்