பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 25

ஊரும் கல்லூரியும் ஒரு பெரிய ரெஸிடென்ஷியல் யுனிவர் லிடிக்கு மிக மிகப் பொருத்தமாக இருக்கும் என்று சிபாரிசு செய்யவே மாநில அரசாங்கம் தாமதம் செய்யா மல் சட்டசபையில், ‘மல்லிகைப் பந்தல் யுனிவர்ஸிடி ஆக்ட்’ என்று ஒரு பில் கொண்டு வந்து நிறைவேற்றியது. யுனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் வழங்கிய ஒரு பெருந் தொகையோடு மாநில அரசாங்கமும் ஒரு பெருந்தொகை வழங்கிக் கல்லூரிக் கட்டடங்களையும், விடுதிகளையும், பட்டமளிப்பு விழா மண்டபம், செனட் ஹால் ஆகிய வற்றையும் மெடிகல், என்ஜினியரிங், விவசாயம் ஆகிய பிரிவுகளையும் கட்டி முடித்தது. அதன் முதல் நிறுவனர் பூபதியின் நினைவாகப் பட்டமளிப்பு விழா மண்டபம், அட்மினிஸ்டிரேடிவ் பில்டிங் ஆகியவை அமைந்திருந்த பிரதான மாளிகைக்கு பூபதிஹால் என்ற பெயரும் சூட்டப்பட்டது. பூபதியின் சொத்துக்களில் பெரும் பகுதி ஏற்கெனவே அந்தக் கல்லூரி டிரஸ்டைச் சேர்ந்தவையாக இருந்தது. அவருடைய ஒரே மகள் பாரதி போஸ்ட்கிராஜுவேட் படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்காக அமெரிக்கா போனாள். நடுவே அவள் திரும்பியபோது வீடு உள்பட மீதமிருந்த சொத்துக்களையும் பல்கலைக் கழகத்துக்கே எழுதிக் கொடுத்துத் தந்தை பெயரில் ஒரு ஷேர் ஏற்பாடு செய்து விட்டு மீண்டும் வெளிநாட்டுக்கே போய்விட்டாள். பூபதியின் அழகிய பங்களா பல்கலைக் கழக வைஸ்சான்ஸ்லர் மாளிகை ஆகியது. மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தில் புதிய புதிய துறைகளை அமைப்பதில் அதன் முதல் வைஸ்-சான்ஸ்லரும், சிண்டி கேட்டும் பெரும் பணி புரிந்தார்கள். இரண்டு ஆண்டுகள் அந்தப் பல்கலைக் கழக வளர்ச்சியில் பொற்காலத்தைப் படைத்தனர்.

மொழிப் போராட்டம் வந்தது. அந்தப் பல்கலைக் கழகத்தையும் அது பாதித்தது. மொழிப் போராட்டத்தை அடுத்து வந்த பொதுத் தேர்தலில் அந்தப் போராட்டத்தை முன் நின்று நடத்திய கட்சிகள் வென்றன. முதன் முறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/27&oldid=609426" இலிருந்து மீள்விக்கப்பட்டது